ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் வருகிற ஜூன் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் தென்ஆப்பிரிக்கா அணி 5 டி20போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவில் தொடர் தோல்வியை தழுவிய இந்திய அணி, அதற்கு பழிதீர்க்கும் வகையில் சிறப்பான ஒரு அணியை தேர்ந்தெடுத்து பழிவாங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
இந்தத் தொடர் எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னேற்பாடாக இருப்பதால், இந்தத் தொடரில் இந்திய அணி பல்வேறு விஷயங்களை பரிசோதித்துப் பார்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்த மூன்று வீரர்களில் ஒருவர் ரோகித் சர்மாவிற்கு பதில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார்கள் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்
கே எல் ராகுல்
ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியை வழிநடத்திய கே எல் ராகுல், இந்திய அணியை மிகவும் மோசமாக வழிநடத்தி தொடர் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.
ஆனால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு அணியை திறம்பட வழிநடத்தி பல வெற்றிகளை குவித்து வருவதால்,நிச்சயம் இவருக்கு இந்திய அணியை வழி நடத்துவதற்கான மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
