தென்னாப்பிரிக்க அணியை முதன்முதலில் எதிர்கொள்ளப் போகும் 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம் !! 1
Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. டெஸ்ட் தொடருக்கு பிறகு நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.


இந்திய அணியின் புதிய கேப்டனான ரோஹித் சர்மா காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியதால், கே.எல் ராகுல் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதே போல் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் ஒருநாள் தொடருக்கான துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க மண்ணில். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதன் முதலாக விளையாடப் போகும் 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்

வெங்கடேஷ் ஐயர்

2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிமுகமான இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் வெங்கடேச ஐயர் தனது சிறப்பான திறமையின் மூலம் கிரிக்கெட் வட்டாரத்தில் பிரபலமான வீரராக அறிமுகமானார்.

மேலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் விஜய் ஹசாரே உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளிலும் மிகச்சிறந்த முறையில் விளையாடியதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். இதன் மூலம் வெங்கடேச ஐயர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க அணியை முதன்முதலில் எதிர்கொள்ளப் போகும் 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம் !! 2

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *