ருத்ராஜ் கெய்க்வாட்
கடந்த வருட ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற வரிசையில் முதலிடத்தை பிடித்த சென்னை அணியின் அதிரடி துவக்க வீரர் ருத்ராஜ், 2022 ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்படவில்லை.
பின் மீண்டும் தனது பார்மை மீட்டெடுத்து சிறப்பாக விளையாட தொடங்கிய ருத்ராஜ் கெய்க்வாட், 12 போட்டிகளில் பங்கேற்று 366 ரன்களை அடித்துள்ளார். இவரை எதிர்வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ஷிகர் தவான் உடன் துவக்க வீரராக விளையாடுவதற்காக தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
