'அவரை பொறுப்புல இருந்து தூக்கிட்டீங்கல்ல, இனிமே செம்மையா பண்ணுவாரு' இந்திய வீரரைப்பற்றி பேசிய முன்னாள் கோச்!! 1

ரஹானேவின் துணை கேப்டன் பொறுப்பு நீக்கப்பட்ட பிறகே நன்றாக விளையாடுவார் என முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் கருத்து தெரிவித்துள்ளார

சமீப காலமாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு மற்றும் துணை கேப்டன் பொறுப்புகள் மாற்றம் பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்து நிலவி வருகின்றன. குறிப்பாக விராட் கோலியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு மற்றும் ரஹானேவின் டெஸ்ட் போட்டிக்கான துணை கேப்டன் பொறுப்பு இரண்டும் பறிக்கப்பட்டு, இரண்டுமே ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

'அவரை பொறுப்புல இருந்து தூக்கிட்டீங்கல்ல, இனிமே செம்மையா பண்ணுவாரு' இந்திய வீரரைப்பற்றி பேசிய முன்னாள் கோச்!! 2

பயிற்சியின் போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் இருந்து மட்டும் விலகி இருக்கிறார் ரோகித் சர்மா. ஆகையால் தற்போது துணை கேப்டன் பொறுப்பு தற்காலிகமாக கேஎல் ராகுல் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை சிறப்பாக ஏற்று பொறுப்புடன் விளையாடி முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் விளாசி இருக்கிறார் கே எல் ராகுல்.

முதல் நாள் முடிவின் போது ராகுலுக்கு பக்கபலமாக இருந்த முன்னாள் துணை கேப்டன் ரஹானே, சிறப்பாக விளையாடி 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார். முதல் நாள் ஆட்டத்தில் ரஹானே விளையாடிய விதம் நல்ல மனநிலையை காட்டியது. குறிப்பாக அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசி எந்தவித பதட்டமும் இல்லாமல் விளையாடுவதாக வெளிக்காட்டினார்.

'அவரை பொறுப்புல இருந்து தூக்கிட்டீங்கல்ல, இனிமே செம்மையா பண்ணுவாரு' இந்திய வீரரைப்பற்றி பேசிய முன்னாள் கோச்!! 3

இந்நிலையில் துணை கேப்டன் பொறுப்பு மாற்றத்திற்கு பிறகு அவரது ஆட்டம் எப்படி இருக்கும் என்று தனது சமீபத்திய பேட்டியில் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

“சிலரிடம் பொறுப்பு திரும்பபெற்ற பிறகு, மிகப்பெரிய பாரம் தன்னைவிட்டு நீங்கியதாக கருதுவர். அப்படி ஒரு மனநிலையில் ரஹானே இருப்பதாக நான் பார்க்கிறேன். ஏனெனில் கேப்டன் பொறுப்பு மற்றும் துணை கேப்டன் பொறுப்பு இரண்டிலும் அவர் இருந்தபோது ஆட்டம் எவ்வாறு இருந்தது என்று நான் கவனித்தேன். தற்போது எந்தவித கேப்டன் பொறுப்பிலும் அவர் இல்லாததால முதல் இன்னிங்சில் ரகானே ஆடிய விதம் நல்ல மனநிலையை வெளிக்காட்டியது.

'அவரை பொறுப்புல இருந்து தூக்கிட்டீங்கல்ல, இனிமே செம்மையா பண்ணுவாரு' இந்திய வீரரைப்பற்றி பேசிய முன்னாள் கோச்!! 4

ராகுல் டிராவிட் போலவே ரஹானேவும் நல்ல துவக்கத்தை பெறுவதற்காக துவக்கத்தில் வேகமாக விளையாடுவார். 20, 30 ரன்கள் பெற்று அழுத்தத்தை குறைத்த பிறகு மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். முதல் நாள் ஆட்டத்தில் நான் அப்படி ஒரு மனநிலையில் அவரை பார்த்தேன். இனி வரும் போட்டிகளில் அவர் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன்.” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *