பும்ராஹ்வை போன்று இவரும் உலகின் மிக சிறந்த பந்துவீச்சாளர் தான் ; ஆஷிஸ் நெஹ்ரா பாராட்டு !!! 1

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் முகமது சமி குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.

உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் பும்ரா தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார், அதில் குறிப்பாக தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.

பும்ராஹ்வை போன்று இவரும் உலகின் மிக சிறந்த பந்துவீச்சாளர் தான் ; ஆஷிஸ் நெஹ்ரா பாராட்டு !!! 2

எந்த மைதானமாக இருந்தாலும் தனது அபாரமான வேகத்தோடு பந்து வீச கூடிய திறமை படைத்த பும்ரா இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் தலைவர் என்றும் பாராட்டும் அளவிற்கு பந்துவீச கூடியவர்.

இந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான ஆட்டத்திற்கு கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் பும்ரா மட்டும் சிறந்த பந்துவீச்சாளர் கிடையாது என்றும் அவருக்கு இணையான பந்துவீச்சாளர்கள் இந்த உலகத்தில் உள்ளார்கள் என்றும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், பும்ரா பல முறை சிறப்பாக செயல்பட்டு பல சாதனை படைத்துள்ளார், மேலும் அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த உலகத்தில் பும்ராவை போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் பலர் உள்ளனர், இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியும் மிக சிறந்த பந்துவீச்சாளர் தான், இவர்கள் இருவரையும் நான் ஒப்பிட்டு பேசவில்லை ஆனால் என்னிடம் இந்த இரண்டு பந்து வீச்சாளர்களில் யார் சிறந்தவர் என்று கேட்டால் என்னால் கண்ணை மூடிக்கொண்டு பும்ராவை தேர்ந்தெடுக்க முடியாது, சமியும் தனது அபாரமான பந்து வீச்சால் எந்த ஒரு மைதானமாக இருந்தாலும் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார் என்று ஆஷிஷ் நெஹரா பேசியுள்ளார்.

பும்ராஹ்வை போன்று இவரும் உலகின் மிக சிறந்த பந்துவீச்சாளர் தான் ; ஆஷிஸ் நெஹ்ரா பாராட்டு !!! 3

மேலும் இவர்களை தவிர்த்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரையும் தலைசிறந்த பந்து வீச்சாளர் என்று பாராட்டி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *