"குழந்தை முகம், ஆனால் பேயாட்டம்" ரிஷப் பண்ட்டுக்கு போட்டியாக வரப்போகும் வீரர் இவர்தான் - உறுதியாக சொல்லும் டெல் ஸ்டெய்ன்! 1

இந்திய அணியில் ரிஷப் பண்டிற்கு மாற்றாக இவர் விரைவில் வருவார் என கருத்து தெரிவித்திருக்கிறார் டேல் ஸ்டெயின்.

டி20 தொடர் முடிவுற்ற பிறகு இந்திய அணி உலக கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலிய சென்றுவிட்டது. அதற்கு அடுத்ததாக நடைபெற்ற ஒரு நாள் தொடரை பலரும் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் இளம் வீரர்களுக்கு இந்த தொடர் ஒரு திருப்புமுனையாக அமையும் அளவிற்கு மாறியுள்ளது.

"குழந்தை முகம், ஆனால் பேயாட்டம்" ரிஷப் பண்ட்டுக்கு போட்டியாக வரப்போகும் வீரர் இவர்தான் - உறுதியாக சொல்லும் டெல் ஸ்டெய்ன்! 2

இஷான் கிஷன், முகமது சிராஜ், ஷ்ரேயாஸ் ஐயர், கில் போன்றோர் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் வரை டி20 அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சனுக்கு உலக கோப்பையில் இடம் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் தன்னை ஒருநாள் போட்டியில் நிரூபித்து தேர்வு குழுவின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை மீது இந்திய அணியின் கவனம் திரும்பும். அதற்காக வீரர்களையும் முழுவீச்சில் கவனம் தேர்வு செய்வர். அப்போது சமீபத்திய ஒருநாள் தொடரில் இளைஞர்கள் செயல்பட்ட விதம் நிச்சயம் கவனத்தில் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"குழந்தை முகம், ஆனால் பேயாட்டம்" ரிஷப் பண்ட்டுக்கு போட்டியாக வரப்போகும் வீரர் இவர்தான் - உறுதியாக சொல்லும் டெல் ஸ்டெய்ன்! 3

டி20 உலக கோப்பை தொடரில் இடம்பெற்றிருக்கும் ரிஷப் பண்ட் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. உலக கோப்பை தொடருக்கு பிறகு வரும் தொடர்களில் ரிஷப் பண்ட் ஒருவேளை வெளியில் அமர்த்தப்பட்டால், அவரது இடத்தை நிரப்ப இந்த ‘குழந்தை முகம்’ கொண்டு வீரர் சரியாக இருப்பார் என டெல் ஸ்டெயின் கருத்து தெரிவித்திருக்கிறார்.

“இந்திய அணையின் இளம் வீரர்கள் பலமிக்க அணியையும் எளிதாக வீழ்த்துகிறார்கள். மிகுந்த அனுபவத்துடன் விளையாடுகிறார்கள். ஐபிஎல் போன்ற போட்டிகளில் கிடைத்த அனுபவம் அவர்களுக்கு நன்றாக உதவுகிறது. குறிப்பாக இசான் கிஷன், நோர்கியா போன்ற வீரரின் வேகத்தை எதிர்கொண்ட விதம் அசாத்தியமாக இருந்தது. முற்றிலும் தனது பவர் மற்றும் டைமிங் இரண்டையும் கொண்டு விளாசிய விதம் உலகதரமாக இருந்தது.

"குழந்தை முகம், ஆனால் பேயாட்டம்" ரிஷப் பண்ட்டுக்கு போட்டியாக வரப்போகும் வீரர் இவர்தான் - உறுதியாக சொல்லும் டெல் ஸ்டெய்ன்! 4

குஜராத் லயன்ஸ் அணியில் இருவரும் ஒன்றாக விளையாடினோம். நான் அவரது ஆரம்ப கட்டத்தை பார்த்திருக்கிறேன். மிக நன்றாக பந்துகளை எதிர்கொள்வார். குழந்தை முகத்தில் இருக்கிறார். ஆனால் பவராக அடிக்கிறார் என ஆச்சரியப்பட்டேன். அதன்பிறகு ‘குழந்தை முகம்’, ராக் ஸ்டார், ஜஸ்டின் பைபர் என்றெல்லாம் அழைப்பேன்.

சமீபகாலமாக உள்ளூர் போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வீரராகவும் இருக்கிறார். இவர் விளையாடும் விதம் நிச்சயம் ரிஷப் பண்ட்டிற்கு மாற்றாக வரக்கூடிய அளவிற்கு இருக்கிறது.” என்றார்.

2016 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பை தொடரில் ரிஷப் பன்ட் மற்றும் இஷான் கிஷன் இருவரும் ஒன்றாக விளையாடினர். ரிஷப் பண்டிற்கு கேப்டனாக இசன் கிஷன் இருந்திருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் பண்ட் அதிரடியாக விளையாடியது தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆகையால் விரைவாக இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *