தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இந்தியாவில் இருக்கிறார்.
இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பதில் மாற்று வீரர் ஒருவரை இந்திய அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தருக்கு பதில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ள மூன்று வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
அக்ஷர் பட்டேல்
சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தனது திறமையால் இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ள அக்ஷர் பட்டேல் நிச்சயம் வாசிங்டன் சுந்தர்க்கு பதில் ஒரு நல்ல தேர்வாக இருப்பார்.
இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தர்க்கு பதில் இந்திய அணிக்கு தேர்வாகும் மாற்று வீரராக அக்ஷர் பட்டேல் இருப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
