ஜெயந்த் யாதவ்
தனது அபாரமான சுழற்பந்துவீச்சால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற ஜெயந்த் யாதவ் வெறும் 7 ஓவர்கள் மட்டுமே வீசினார். இருந்தபோதும் இவருடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்து தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர்க்கு பதில் ஜெயந்த் யாதவை தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரராக தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கபடுகிறது.
