நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க ருத்ராஜ் கெய்க்வாட் மிக சிறந்த வீரர்தான் ; ஆதரவளித்த பார்திவ் பட்டெல்!! 1

இந்திய அணியின் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் பேட்டிங் டெக்னிக் சிறப்பாக உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் பட்டெல் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரெகுளர் வீரராக விளையாட ஆரம்பித்தார்.

நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க ருத்ராஜ் கெய்க்வாட் மிக சிறந்த வீரர்தான் ; ஆதரவளித்த பார்திவ் பட்டெல்!! 2

இவருடைய சிறந்த ஆட்டத்தின் காரணமாக இவரை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்த போட்டிகளில் களமிறக்கியது அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ருத்ராஜ் தன் மீது வைத்த நம்பிக்கையை நல்ல முறையில் காப்பாற்றி வந்தார்.

இவர் 2021 ஐபிஎல் தொடரில் அதிகமான ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்து அசத்தினார், இதன் காரணமாக இவர் மீது இருந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது, ஆனால் 2022 ஐபிஎல் தொடரில் இவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க ருத்ராஜ் கெய்க்வாட் மிக சிறந்த வீரர்தான் ; ஆதரவளித்த பார்திவ் பட்டெல்!! 3

இருந்தபோதும் இவரை நம்பி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தேர்ந்தெடுத்தது,ஆனால் இவர் இந்த தொடரில் ஒரு போட்டியில்(57 ரன்கள்) மட்டுமே நன்றாக விளையாடியுள்ளார்.

இதனால் இவரின் மோசமான பார்மை பலர் விமர்சித்து வருகின்றனர்.ஆனால் இளம் வீரரான ருத்ராஜ் நிச்சயம் நன்றாக விளையாடுவார் என்று பலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்ராஜ் கெய்க்வாட் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க ருத்ராஜ் கெய்க்வாட் மிக சிறந்த வீரர்தான் ; ஆதரவளித்த பார்திவ் பட்டெல்!! 4

அதில் பேசிய அவர், “ருத்ராஜ் கெய்க்வாட் ரிஸ்க் குறைந்த ஷாட்களை தேர்ந்தெடுத்து சிறப்பாக செயல்படுகிறார், இதுபோன்ற ஆட்டத்தை நாம் கேஎல் ராகுல், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடி பார்த்திருக்கிறோம், பலர் ருத்ராஜ் ஐபிஎல் தொடரில் விளையாடிய விதத்தை வைத்து அவர் மோசமான பார்மில் உள்ளார் என்று விமர்சிக்கின்றனர். ஆனால் ஒரு நல்ல வீரராக ருத்ராஜ் சிறந்த டெக்னிக் வைத்துள்ளார். இதன் காரணமாக இவருடைய அந்த மோசமான பார்ம் என்பது எப்பொழுதுமே இருக்காது, நிச்சயம் அவர் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார், ஒரு நல்ல வீரருக்கு ஒரு ஆட்டம் போதும் தன்னுடைய இழந்த பார்மை மீட்பதற்கு என்று ருத்ராஜ் குறித்து பார்த்தீவ் பட்டேல் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published.