இந்திய அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை சவுத் ஆப்பிரிக்கா அணி வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது, இதற்கான 21நபர் கொண்ட சவுத் ஆப்பிரிக்கா அணியின் ஸ்குவாட் வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 2021-2023 வரை நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெறும் முதல் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும். இதனால் நடைபெறும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் அனைத்து அணிக்கும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சவுத் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது, இதன் காரணமாக சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிற 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இரண்டு இடத்தில் இடம் பெறுவதற்காக கடுமையாக போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர் கொள்வதற்கு சவுத் ஆப்பிரிக்கா அணி கடுமையான திட்டங்களை தீட்டி வருகிறது இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா அணி இருபத்தி ஒரு நபர் கொண்ட டெஸ்ட் ஸ்குவாடை அறிவித்துள்ளது.

இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ள சவுத்ஆப்பிரிக்கா அணியின் 21பேர் கொண்ட படை
டீன் எல்கர், டெம்பா பவுமா (c), குயின்டன் டி காக் (wk), காகிசோ ரபாடா, சாரல் எர்வி, பெவ்ரன் ஹென்றிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேஷவ் மஹராஜ், லுங்கி இங்கிடி, எய்டன் மார்க்ரம், வியான் மல்டர், அன்றிச் நோட்சே, கீகன் பீட்டர்சன், ராசீ வெண்டர் டசன், கைல் வேரின்னே, மார்கோ ஜன், கிளின்டன் ஸ்டுர்மன், பிரெனெலன் சப்ரயன், சிசண்டா மகலா,ரயான் ரிகல்டன், டுவான் ஆலிவர்.