விராட்கோலி இதை பண்ணலனா, கிரிக்கெட்ல இருந்தே காலி; எச்சரித்த முன்னாள் வீரர்!! 1

விராட் கோலி இனிமேல் தவறு செய்யாமல் இருக்க இதை மட்டும் பண்ண வேண்டுமென்று ஆஷிஸ் நெஹ்ரா எச்சரித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. துவக்க ஜோடி மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்தனர். இது தென்ஆப்பிரிக்க மைதானங்களில் சாதனை பார்ட்னர்ஷிப் ஆக மாறி இருக்கிறது.

விராட்கோலி இதை பண்ணலனா, கிரிக்கெட்ல இருந்தே காலி; எச்சரித்த முன்னாள் வீரர்!! 2

அதற்கு அடுத்து வந்த புஜாரா எதுவும் எடுக்கவில்லை. மூன்றாவது விக்கெட்டிற்கு உள்ளே வந்த விராட் கோலி, நல்ல மனநிலையுடன் விளையாடினார். சிறப்பான துவக்கம் இவருக்கு கிடைத்த பிறகு நிச்சயம் அரைசதம் கடந்து சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக லுங்கி இங்கிடி வீசிய பந்தை அடிக்க முயற்சித்தது கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மீண்டும் ஒரு முறை விராட் கோலி குறைந்த ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர். விராட் கோலிக்கு நான்காவது மற்றும் ஐந்தாவது ஸ்டம்பில் பந்து சென்றபோது, அதை அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கோலி இப்படி ஆட்டமிழப்பது, இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் இதே போன்ற தவறை இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மைதானங்களில் செய்திருக்கிறார்.

விராட்கோலி இதை பண்ணலனா, கிரிக்கெட்ல இருந்தே காலி; எச்சரித்த முன்னாள் வீரர்!! 3

விராட்கோலி இத்தகைய மோசமான முறையில் ஆட்டம் இழந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கருத்து தெரிவித்திருக்கிறார்.

“விராட் கோலி உள்ளே விளையாட வந்தால் குறைந்தபட்சம் அவரிடம் 100 ரன்கள் எதிர்பார்ப்போம். ஏனென்றால் கடந்த காலங்களில் அப்படியான ஆட்டத்தை தான் அவர் வெளிப்படுத்தியிருந்தார். சமீபகாலமாக சதம் அடிப்பதற்கு மிகவும் திணறி வருகிறார். முதல் இன்னிங்சில் கோலி ஆட்டமிழந்த விதம் நமக்கு மட்டுமல்லாது, அவருக்கும் வருத்தமாக இருக்கும்.

விராட்கோலி இதை பண்ணலனா, கிரிக்கெட்ல இருந்தே காலி; எச்சரித்த முன்னாள் வீரர்!! 4

பலமுறை நான்காவது ஸ்டெம்பில் சென்றுகொண்டிருந்த பந்தை அடிக்க முயற்சித்து விராட்கோலி ஆட்டம் இழந்ததை பார்த்திருக்கிறோம். தொடர்ந்து இதே தவறை செய்து வருகிறார். முதல் இன்னிங்சில் ராகுல் ஆடிய விதத்தை பார்த்து விராத் கோலி வெளியே சென்ற பந்தை விளையாடாமல் விட்டிருக்க வேண்டும். இந்த தவறு மீண்டும் நடக்காமல் இருக்க, அவர் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *