இஷாந்த் சர்மாவிற்கு இந்திய அணி சரியான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும்; அறிவுரை வழங்கிய ஷான் பொல்லாக் !! 1

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இஷாந்த் ஷர்மா குறித்து பேசியுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இஷாந்த் சர்மாவிற்கு இந்திய அணி சரியான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும்; அறிவுரை வழங்கிய ஷான் பொல்லாக் !! 2

கடந்த இரு தினங்களுக்கு முன்பு துவங்கிய (11-1-22) இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த நிலையில் ஒரு தலைப் பட்சமாகவே இந்த தொடர் போகும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனால் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டி குறித்து தனது கருத்துக்களை பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய முகமது சிராஜிற்கு பதில் மாற்று வீரராக இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாதான் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு pஇந்திய அணி வாய்ப்பளிக்காமல் உமேஷ் யாதவிர்க்கு வாய்ப்பை அளித்துள்ளது.

இஷாந்த் சர்மாவிற்கு இந்திய அணி சரியான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும்; அறிவுரை வழங்கிய ஷான் பொல்லாக் !! 3

இதனால் இந்திய அணி இஷாந்த் ஷர்மாவை புறக்கணிக்கிறது என்ற விமர்சனத்தை சில கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர், அதனை உறுதிப்படுத்தும் வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் சான் பொல்லாக் இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதில், இந்திய அணி இஷாந்த் சர்மாவிற்கு சரியான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும் அவர் இந்திய அணிக்கு பலமுறை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார், அதற்கான மரியாதை அவருக்கு கொடுத்தே ஆக வேண்டும். எதற்காக அவரை விளையாட வைக்க வில்லை என்ற காரணத்தை அவரிடம் தெளிவாக விளக்கவேண்டும்,’உதாரணமாக இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லை என்றால் நீங்கள்தான் தகுதியான ஆளாக இருப்பீர்கள் என்று இஷாந்த் ஷர்மாவின் தெரிவித்து இருந்தால் அவர் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் அதை ஏற்று இருப்பார்’ இது வெறும் ஒரு விளையாட்டுதான் என்று ஷான் பொல்லாக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *