நாக்பூர் ஆடுகளம் ஸ்பின்னர்களுக்கு ஏற்றது

ஆடுகளத்தில் இன்று சுழற்ப்பந்து வீச்சிற்கு சாதகமான பெரிய பெரிய பிளவுகள் மற்றும் வெடிப்புகள் ஆகியவை காணப்பட்டது. இதனால் சுழற்ப்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் பெஉமூச்சு விட்டுள்ளனர். கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இருவருக்கும் சேர்த்து ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 5 டெஸ்ட் போட்டி நடந்து இருக்கிறது. இதில் 3 ஆட்டத்தில் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா) இந்தியா வென்றது. ஒரு ஆட்டம் (இங்கிலாந்து) டிரா ஆனது. 2010-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இருந்தது.இந்தியா 8 விக்கெட்டுக்கு 566 ரன் குவித்ததே (நியூசிலாந்துக்கு எதிராக 2010) அதிகபட்ச ஸ்கோர் ஆகும். தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 253 ரன் எடுத்ததே தனிப்பட்ட வீரரின் அதிகபட்சமாகும்.

இந்திய வீரர் ஷேவாக் 4 டெஸ்டில் 357 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 15 விக்கெட் கைப்பற்றி உள்ளார். நாக்பூர் மைதானத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்டில் இந்தியா 124 ரன் வித்தியாசத்தில் வென்று இருந்தது.

ஆனால், மீண்டும் புல்தரையிலான வேகப்பந்து வீச்சு ஆட்டக்களமே தேவை என்று இந்திய கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தொடர் முழுதும் டிசம்பர் 24-ம் தேதி முடிவடையும் நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு 12 நாட்கள் அவகாசமே உள்ள நிலையில் வேறு வழியில்லை வேகப்பந்து ஆட்டக்களத்தில் ஆடித்தான் ஆகவேண்டும் என்கிறார் விராட் கோலி திட்டவட்டமாக.

“இந்தத் தொடர் முடிந்து தென் ஆப்பிரிக்காவுக்கு 2 நாட்களில் கிளம்ப வேண்டியுள்ளது. எனவே ஆட்டச்சூழலில் இருப்பது அவசியம், எங்களுக்கு வேறு வழியில்லை, வேகப்பந்து, ஸ்விங் ஆட்டக்களத்தில்தான் ஆட வேண்டும்.

ஒரு மாதகால அவகாசம் இருந்தால் முகாம் ஏற்படுத்தி நல்ல முறையில் பயிற்சி எடுத்திருக்கலாம். கால அவகாசம் இல்லாததால் நாங்கள் எதிர்காலத்தையும் கணிக்க வேண்டியுள்ளது.

டெஸ்ட் போட்டிகள் முடிவுகளுக்குப் பிறகே ஒவ்வொருவரும் வீரர்களின் ஆட்டம் பற்றி தீர்ப்பளிக்கின்றனர். எனவே எங்களுக்கு என்ன தேவையோ அந்த வகையில் தயாரிப்பு செய்து கொள்வது முக்கியம். எனவே எங்களை நாங்களே சவால்களுக்கு உட்படுத்த இதுவே சரியான தருணம்.

கடினமான சூழ்நிலைகளை நாங்கள் எதிர்கொள்ள விரும்புகிறோம். இதனால் உடனடியாக அனைவரும் நல்ல முறையில் ஆடி விடுவார்கள் என்று கருதவில்லை. ஆனால் இவ்வகைப் பிட்ச்களில் ஆடும் போது சவுகரியமாக உணர வேண்டுமல்லவா? ஓரிண்டு இன்னிங்ஸ்களுக்குப் பிறகு ஒருவர் நிச்சயம் சிறப்பாக வருவார். நன்றாக ஆடத் தொடங்கிவிட்டால் அந்தத் தன்னம்பிக்கையின் மூலம் மேலும் செல்ல முடியும். பவுலர்களுக்கும் இதுதான், எனவே இதனை ஒரு வாய்ப்பாக நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.

கொல்கத்தா பசுந்தரை ஆட்டக்களத்தில் ஐசிசி தரவரிசையில் டாப் 5-ல் உள்ள அஸ்வின், ஜடேஜா ஆகியோர் 10 ஓவர்களையே வீசினர்.

Editor:

This website uses cookies.