ரவி சாஸ்திரி.
அணில் கும்ப்ளேவிற்கு பிறகு 2017 ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சிளராக பொறுப்பேற்ற ரவி சாஸ்திரி இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று விட்டார் என்ற கூறலாம். இவருடைய பயிற்சியின் கீழ் இந்திய அணி டெஸ்ட் தொடரின் அசைக்க முடியாத அணியாக வலம் வந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி இருந்தும் 2021 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இவர் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்
இந்த நிலையில் இளம் வீரர்களை உள்ளடக்கிய அணியை தேர்வு குழு தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இவரை விவிஎஸ் லக்ஷ்மன் அல்லது ராகுல் டிராவிட்டிர்க்கு பதில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ஒருமுறை வாய்ப்பளிக்கலாம் என பெரும்பாலானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.