அவனுக்கு பயம்னா என்னென்ன தெரியல, ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து வெகுவாக பாராட்டிய முன்னாள் வீரர் !! 1
அவனுக்கு பயம்னா என்னென்ன தெரியல, ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து வெகுவாக பாராட்டிய முன்னாள் வீரர்..

ஹர்திக் பாண்டியாவிர்க்கு பயம்னா என்னன்னே தெரியல என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரிதிந்தர் சோதி பாராட்டியுள்ளார்.

ரோகித் சர்மா இல்லாத நிலையில் டி20 தொடருக்கான இந்திய அணியின் ஆக்டிங் கேப்டனாக செயல்பட்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, எதிர்கால இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக செயல்படுவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளது என அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

அவனுக்கு பயம்னா என்னென்ன தெரியல, ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து வெகுவாக பாராட்டிய முன்னாள் வீரர் !! 2

குறிப்பாக நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார்.

குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், கடைசி ஓவரை அனுபவ சுழற் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேலிடம் கொடுத்து ரிஸ்க்கான முடிவை எடுத்து அதில் சிறந்த முடிவையும் கண்டுள்ளார். இப்படி இக்கட்டான நிலையில் அணி இருக்கும் பொழுது தைரியமாக முடிவெடுத்த ஹர்திக் பாண்டியாவின் அணுகுமுறையை பெரும்பாலானவர்கள் வியப்புடன் பார்க்கின்றனர். இதுபோன்ற முடிவை ஒரு சிலர் கேப்டன்களால் மட்டுமே எடுக்க முடியும் என்றும் ஹர்திக் பாண்டியாவை வெகுவாக பாராட்டியும் வருகின்றனர்.

அவனுக்கு பயம்னா என்னென்ன தெரியல, ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து வெகுவாக பாராட்டிய முன்னாள் வீரர் !! 3

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரிதிந்தர் சோதி, இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா கேப்டனாக பயமரியா கேப்டனாக திகழ்கிறார் என பாராட்டி பேசியுள்ளார்.

இதுகுறித்து ரிதிந்தர் சோதி பேசுகையில்,“அவர் என்ன செய்தாரோ அதை தெரிந்து செய்தார் என நம்புகிறேன், அவர் அணியை பயமில்லாமல் வழிநடத்தியுள்ளார். மேலும் அணியில் இருக்கும் வாய்ப்புகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தியுள்ளார். மேலும் ரிஸ்க் எடுப்பதை பற்றி கொஞ்சம் குடும்பம் பயப்படாமல் கச்சிதமாக செய்துள்ளார், மேலும் இந்திய அணி சில கட்டங்களில் தடுமாறியதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா அதை சிறப்பாகவும் கையாண்டுள்ளார் . அணி இக்கட்டான நிலைமை இருக்கும் பொழுது மிகச் சிறப்பாக செயல்பட்டு அணி வெற்றி பெறச் செய்து, தனக்கு கொடுத்த சவால்களை ஹர்திக் பாண்டியா பயமில்லாமல் முறியடித்துள்ளார் என ரிதிந்தர் சோதி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *