குல்தீப் யாதவ் அவுட்... அக்‌ஷர் பட்டேல் இன்; இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம் !! 1

இந்திய அணியில் இணைந்த இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது இதில் 4ஆம் தேதி மோஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 222 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

குல்தீப் யாதவ் அவுட்... அக்‌ஷர் பட்டேல் இன்; இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம் !! 2

இதனிடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தயாரிப்பில் இரண்டு அணிகளும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, இந்த போட்டியில் இந்திய அணிக்குதான்,வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் என்று அனைவருக்குமே தெரியும்.

இந்த நிலையில், இந்திய அணி குல்தீப் யாதவை இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குல்தீப் யாதவ் அவுட்... அக்‌ஷர் பட்டேல் இன்; இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம் !! 3

மேலும் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல் மீண்டும் இந்திய ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளதாகவும் இந்திய அணியிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் அக்சர் பட்டேல் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில் தற்போது அக்சர் பட்டெல் பரிபூரணமாக குணமாகிவிட்டார் என்று இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தேர்வாளர்கள் குழு இணைத்துள்ளது.

குல்தீப் யாதவ் அவுட்... அக்‌ஷர் பட்டேல் இன்; இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம் !! 4

குல்தீப் யாதவ் தவிர்த்து, இந்திய அணியின் அசிஸ்டன்ட் பேட்டிங் பயிற்சியாளர் அபூர்வா தேசாய், பயிற்சியாளர் ஆனந்த், பிசியோதெரபிஸ்ட் பார்த்தோ ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்னவென்பது குறித்து இன்னும் பிசிசிஐ அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியின் டெஸ்ட் ஸ்குவாட் .

ரோகித் சர்மா (c), பிரியங்க் பச்சல், மாயங்க் அகர்வால்,விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பண்ட்,கேஎஸ் பரத், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், அஸ்வின், அக்ஷர் பட்டேல், சௌரப் குமார், முகமது சமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா (vc)

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *