உங்க வேலையே வளர்ந்து வரும் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது தான்; இளம் வீரர் நீக்கம் குறித்து இந்திய அணியிடம் கேள்வி எழுப்பிய கவுதம் கம்பீர்!! 1
உங்க வேலையே வளர்ந்து வரும் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது தான்; இளம் வீரர் நீக்கம் குறித்து இந்திய அணியிடம் கேள்வி எழுப்பிய கவுதம் கம்பீர்…

வெறுமண அணியை அறிவிப்பது மட்டும் இந்திய அணி நிர்வாகத்தின் வேலை கிடையாது என கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடர் ஜனவரி 3,5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில், டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

உங்க வேலையே வளர்ந்து வரும் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது தான்; இளம் வீரர் நீக்கம் குறித்து இந்திய அணியிடம் கேள்வி எழுப்பிய கவுதம் கம்பீர்!! 2

ரோஹித் சர்மா விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இடம்பெறாத இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட பட்டாளத்தை இந்திய அணி அறிவித்துள்ளது.

இந்தத் தொடர் மற்ற தொடர்களை போன்று இல்லாமல் பெரும்பாலான இளம் வீரர்களை கொண்டு நடைபெறுவதால் இந்திய அணியின் பலம் எப்படி உள்ளது என்பதை சோதிப்பதற்கும் ஒரு நல்ல முயற்சியாக உள்ளது என்றும் பெரும்பாலானவர்கள் தெரிவித்து விடுகின்றனர்.

உங்க வேலையே வளர்ந்து வரும் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது தான்; இளம் வீரர் நீக்கம் குறித்து இந்திய அணியிடம் கேள்வி எழுப்பிய கவுதம் கம்பீர்!! 3

அணி நிர்வாகம் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.. கவுதம் கம்பீர்

இது ஒருபுறமிருக்க,இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில வீரர்கள் இடம்பெறாமல் போனது முன்னாள் கிரிக்கெட் வீரர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் வளர்ந்து வரும் வீரரான பிரித்வி ஷா, இடம்பெறாமல் போனாது இந்திய கிரிக்கெட் வட்டத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் இந்திய அணி குறித்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் தன்னுடைய வெளிப்படையான கருத்துக்களை பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்,இளம் வீரரான பிரித்வி ஷா-விர்க்கு இந்திய அணி நிர்வாகம் ஏன் வாய்பளிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்க வேலையே வளர்ந்து வரும் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது தான்; இளம் வீரர் நீக்கம் குறித்து இந்திய அணியிடம் கேள்வி எழுப்பிய கவுதம் கம்பீர்!! 4

அதில்,“எதற்காக தேர்வாளர்கள் இருக்கிறார்கள்..? வெறுமனே அணியை தேர்வு செய்து அல்லது ஒரு அணியை அறிவித்துவிட்டு அவர்களை போட்டிக்கு தயாராகுங்கள் என்று சொல்வதற்காகவா..? அணியின் தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகம் அப்படி செய்யாமல் வளர்ந்து வரும் வீரரான பிரித்வி ஷா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பிரித்வி ஷா எந்த அளவிற்கு திறமையான பேட்ஸ்மேன் என்பது நம் அனைவருக்கும் தெரியும், அப்படிப்பட்ட ஒரு வீரரை சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே அணி நிர்வாகத்தில் முக்கியமான வேலையாகும். மேலும் இவர் போன்ற ஒரு வீரரை போட்டிக்காக தயார்படுத்த வேண்டும் அல்லது பிராக்டிஸ் செசனில் அவருக்கு உதவியாவது செய்ய வேண்டும்” என இந்திய அணி நிர்வாகத்திற்கு கௌதம் கம்பீர் அறிவுரை கொடுத்துள்ளார்.

உங்க வேலையே வளர்ந்து வரும் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது தான்; இளம் வீரர் நீக்கம் குறித்து இந்திய அணியிடம் கேள்வி எழுப்பிய கவுதம் கம்பீர்!! 5

மேலும், இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டோ அல்லது தேர்வு குழுவின் தலைவரோ.. பிரித்வி ஷா போன்ற வீரர்கள் மத்தியில் தொடர்பு கொண்டு அவர்களை தங்களது வட்டத்துக்குள்ளே வைத்திருக்க வேண்டும். எனக்கு நன்றாக விளையாடாத வீரர்கள் கூட பிடிக்கும், ஆனால் அவர்கள் எப்பொழுதும் கண்காணிப்பு வட்டத்துக்குள்ளேயே இருக்க வேண்டும், அவர்களை நாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அவர்கள் எங்காவது சென்று விடுவார்கள்” என இளம் வீரர்களின் எதிர்காலம் குறித்தும் கௌதம் காம்பீர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *