இந்திய அணியை வீழ்த்த நாங்கள் வைத்திருக்கும் திட்டம் இது தான்; இலங்கை கேப்டன் தசுன் ஷானகா ஓபன் டாக் !! 1
இந்திய அணியை வீழ்த்த நாங்கள் வைத்திருக்கும் திட்டம் இது தான்; இலங்கை கேப்டன் தசுன் ஷானகா ஓபன் டாக்

இந்திய அணியுடனான இறுதி போட்டிக்காக இலங்கை அணி தயாராக இருப்பதாக இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷானகா தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றின் முடிவில் நேப்பாள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மறுபுறம் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்திய அணியை வீழ்த்த நாங்கள் வைத்திருக்கும் திட்டம் இது தான்; இலங்கை கேப்டன் தசுன் ஷானகா ஓபன் டாக் !! 2

ஆசிய கோப்பை தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி செப்டம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா இலங்கை இடையேயான இறுதி போட்டி இலங்கையின் கொழும்பில் நடைபெற உள்ளது.

இந்திய அணி இலங்கையை விட வலுவான அணியாக இருந்தாலும், சமீபத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் இலங்கை அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா இலங்கை இடையேயான இறுதி போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது.

இந்தநிலையில், இந்திய அணியுடனான இறுதி போட்டி குறித்தான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷானகா, இந்திய அணியுடனான போட்டிக்காக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியை வீழ்த்த நாங்கள் வைத்திருக்கும் திட்டம் இது தான்; இலங்கை கேப்டன் தசுன் ஷானகா ஓபன் டாக் !! 3

இது குறித்து ஷானகா பேசுகையில், “இந்திய அணியுடனான இறுதி போட்டிக்காக நாங்கள் தயாராக உள்ளோம். ஆடுகமே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும். இந்த தொடரில் ஆடுகளமே வெற்றி, தோல்வியில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறே நாங்ம்கள் எங்களது ஆடும் லெவனை தேர்வு செய்வோம். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சின் போது எங்களால் முடிந்தவரை விரைவாக விக்கெட்டை கைப்பற்றுவோம், முடிந்தவரை விரைவாக விக்கெட்டை கைப்பற்றுவதே இந்திய அணிக்கு எதிராக நாங்கள் வைத்திருக்கும் முக்கியமான திட்டம்” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *