ரோகித் சர்மாவை இந்திய அணி புறக்கணிக்கிறதா.. முக்கியான தகவலை வெளியிட்ட பிசிசிஐ நிர்வாகி !! 1
ரோகித் சர்மாவை இந்திய அணி புறக்கணிக்கிறதா.. முக்கியான தகவலை வெளியிட்ட பிசிசிஐ நிர்வாகி..

ரோஹித் சர்மாவின் எதிர்காலத்தைப் பற்றி பிசிசிஐ எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேட்டியளித்துள்ளார்.

இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடர் ஜனவரி 3,5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில், டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

ரோகித் சர்மாவை இந்திய அணி புறக்கணிக்கிறதா.. முக்கியான தகவலை வெளியிட்ட பிசிசிஐ நிர்வாகி !! 2

ரோஹித் சர்மா விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இடம்பெறாத இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட பட்டாளத்தை இந்திய அணி அறிவித்துள்ளது.

இந்தத் தொடர் மற்ற தொடர்களை போன்று இல்லாமல் பெரும்பாலான இளம் வீரர்களை கொண்டு நடைபெறுவதால் இந்திய அணியின் பலம் எப்படி உள்ளது என்பதை சோதிப்பதற்கும் ஒரு நல்ல முயற்சியாக உள்ளது என்றும் பெரும்பாலானவர்கள் தெரிவித்து விடுகின்றனர்.

ரோகித் சர்மாவை இந்திய அணி புறக்கணிக்கிறதா.. முக்கியான தகவலை வெளியிட்ட பிசிசிஐ நிர்வாகி !! 3

கேள்விக்குறியாகிறதா ரோகித் சர்மாவின் கேப்டன்ஷி…

இது ஒருபுறமிருந்தாலும் ரோகித் சர்மா அடுத்தடுத்து ஓய்வு அளிக்கப்பட்டு,ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக இந்தியா அணி முன்னிறுத்துவதற்கான காரணம் இந்திய அணியில் லிமிடெட் ஓவர் போட்டிக்கான கேப்டனாக முற்றிலுமாக ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை நியமிப்பதற்காகத்தான் என்ற வதந்தியும் எங்கே கிரிக்கெட் வட்டத்தில் பதவி வருகிறது.

ஆனால் ரோகித் சர்மாவை ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து, இந்திய அணி நீக்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று பிசிசிஐயை நிர்வாகி ஒருவர் தனிப்பட்ட முறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார் .

ரோகித் சர்மாவை இந்திய அணி புறக்கணிக்கிறதா.. முக்கியான தகவலை வெளியிட்ட பிசிசிஐ நிர்வாகி !! 4

அதில், “தற்போதைய இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான கேப்டனாக ரோஹித் சர்மா தான் செயல்படுவார் அது குறித்த எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை மேலும் வருங்காலங்களில் இந்த இரு தொடரிலும் அவர் கேப்டனாக செயல்படுவாரா மாட்டாரா என்பது குறித்தும் பேசப்படவில்லை. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் ரெக்கார்ட் மிகச் சிறப்பாக உள்ளது என அந்த நிர்வாகி பேசியிருந்தது” குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *