சப்ப டீம்னு நெனச்சிறாதீங்கடா... இப்போ இருக்க இலங்கை டீம் நமக்கே ஆப்பு அடிச்சிருவானுங்க - முன்னாள் வீரர் எச்சரிக்கை! 1

தற்போது விளையாடும் இலங்கை அணியை குறைத்து எடைபோட வேண்டாம் என எச்சரித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

வங்கதேச அணியுடன் ஒருநாள் மற்றும்  டெஸ்ட் தொடரை முடித்த பிறகு இந்திய அணி இந்தியாவிற்கு திரும்புகிறது. இலங்கை அணியுடன் மூன்று டி20கள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

முதல் கட்டமாக நடைபெறும் டி20 போட்டிகள் வருகிற ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடக்கிறது. முதல் போட்டி மும்பை மைதானத்திலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் புனே மற்றும் ராஜ்கோட் மைதானங்களிலும் நடக்கிறது.

சப்ப டீம்னு நெனச்சிறாதீங்கடா... இப்போ இருக்க இலங்கை டீம் நமக்கே ஆப்பு அடிச்சிருவானுங்க - முன்னாள் வீரர் எச்சரிக்கை! 2

இந்தியா மற்றும் இலங்கை இரு அணிகளும் இதுவரை 26 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 17 முறை இந்திய அணியும் 8 முறை இலங்கை அணியும் வென்றுள்ளது.  கடைசியாக ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் மோதிக்கொண்டன. அதில் இலங்கை அணி அவாரமாக வெற்றி பெற்றது.

அந்த நம்பிக்கையுடன் தனது முதல் டி20 தொடரை இந்தியாவிற்கு எதிராக கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கில் களம் இறங்குகிறது.

சப்ப டீம்னு நெனச்சிறாதீங்கடா... இப்போ இருக்க இலங்கை டீம் நமக்கே ஆப்பு அடிச்சிருவானுங்க - முன்னாள் வீரர் எச்சரிக்கை! 3

இந்நிலையில் தற்போது வரவிருக்கும் இலங்கை அணியை இதற்கு முன்னர் வந்த இலங்கை அணி போல் என்ன வேண்டாம், இந்திய அணியை வீழ்த்தும் அளவிற்கு பலம் படைத்தவர்களாக இருக்கிறார்கள் என எச்சரித்து இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராம் அவர் தனது பேட்டியில் கூறியதாவது:

“தற்போது வரவிருக்கும் இலங்கை அணியை சாதாரண அணியாக எடைபோட வேண்டாம். பார்ப்பதற்கு எளிய அணியைப்போல, கடைசியாக நடந்த பல போட்டிகளை தோல்வியை சந்தித்த அணியைப்போல இருக்கலாம். ஆனால் முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளார்கள். கடைசியாக நடந்த ஆசிய கோப்பையிலும் இந்திய அணியை வீழ்த்திக்காட்டியுள்ளார்கள்.

தற்போது அந்த அணியில் இருக்கும் கசுன் ரஜிதா மற்றும் நுவான் துஷாரா ஆகிய இரண்டு சிறந்த பார்மில் இருக்கும் பவுலர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் மஹீஷ் தீக்ஷனா மற்றும் வனிந்து ஹசரங்கா இருவரும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர். அருமையான துவக்க வீரர்களையும் இலங்கை கொண்டிருக்கிறது. இலங்கை அணி இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சப்ப டீம்னு நெனச்சிறாதீங்கடா... இப்போ இருக்க இலங்கை டீம் நமக்கே ஆப்பு அடிச்சிருவானுங்க - முன்னாள் வீரர் எச்சரிக்கை! 4

இந்த நான்கு வீரர்களும் 16 ஓவர்களை வீசுவார்கள். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இது அவ்வளவு எளிதாக இருக்காது. அடுத்ததாக தசுன் ஷனக்கா அல்லது சமிக்கா கருணரத்னே இருவரில் ஒருவர் மீதம் இருக்கும் நான்கு ஓவர்களை வீசுவார்கள். இந்திய அணிக்கு இந்த டி20 தொடர் மிகுந்த சவாலாக இருக்கும். பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *