நீ டி20-க்கு பொருத்தமான ஆளே இல்ல.. தயவுசெஞ்சு கெளம்பிரு - முன்னாள் வீரர் காட்டம்! 1

டி20 போட்டிகளுக்கு பொருத்தமான ஆள் சுப்மன் கில் இல்லை என்றே தெரிகிறது என கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.

அண்டர்-19 இந்திய அணியில் நன்றாக செயல்பட்டு சர்வதேச இந்திய அணிக்குள் வந்த இளம் வீரர்களில் ஒருவர் சுப்மன் கில். கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகினார்.

சுப்மன் கில்

தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முக்கியமான வீரராகவும் நிரந்தர இடத்தையும் பிடித்து வந்த இவருக்கு, தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணியுடனான டி20 தொடரில் முதல்முறையாக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த டி20 அறிமுகம் கில்-க்கு எதிர்பார்த்தவாறு அமையவில்லை. ஏனெனில் முதல் போட்டியில் 7 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இரண்டாவது போட்டியில் வெறும் ஐந்து ரன்கள் ஆட்டம் இழந்தார்.

நீ டி20-க்கு பொருத்தமான ஆளே இல்ல.. தயவுசெஞ்சு கெளம்பிரு - முன்னாள் வீரர் காட்டம்! 2

இரண்டு போட்டிகளிலும் மோசமாக ஷாட்கள் விளையாடி வெளியேறினார். இந்நிலையில் சுப்மன் கில்லுக்கு டி20 போட்டிகள் பொருத்தமானது இல்லை. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு மிகவும் பொருத்தமான வீரராக இருக்கிறார் என கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறுகையில்,

“சுப்மன் கில்லுக்கு இந்த டி20 போட்டிகள் மிகவும் முக்கியமானது. ஆனாலும் சொதப்பியுள்ளார். இப்போதுதான் அறிமுகமாகியுள்ளார். இன்னும் சில காலம் போகட்டும் என கூறலாம். ஆனால் டி20 பொருத்தவரை, அப்படி எடுத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது.

நேரம் எடுத்துக்கொண்டு விளையாடும் வீரராக கில் இருப்பதால், அவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான வீரராக பார்க்கிறேன். டி20 போட்டிக்கான அணுகுமுறை அவரிடம் தெரியவில்லை.

நீ டி20-க்கு பொருத்தமான ஆளே இல்ல.. தயவுசெஞ்சு கெளம்பிரு - முன்னாள் வீரர் காட்டம்! 3

இன்னும் சொல்லப்போனால், அவருக்கு இருக்கும் மனநிலைக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாகவும் ஆகலாம். 19-20 வயதிலேயே உள்ளே வந்துவிட்டார். இன்னும் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார். அந்த விதத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

முன்னணி துவக்க வீரராக இஷான் கிஷன் இருக்கிறார். அவரது அதிரடியான ஆட்டத்திற்கு கட்டாயம் டி20 போட்டிகள் உகந்ததாக இருக்கும்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *