உங்க பந்துவீச்ச பாக்கவே கடுப்பா இருக்கு ; யுஸ்வேந்திர சஹாலை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்..
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஹாலின் ஆட்டம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
ஹர்த்தி பாண்டியா தலைமையிலான இந்தியா அணி, இலங்கை அணியுடனான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் முதல் டி.20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக இல்லை.
சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் முதலில் பந்து வீசிய இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள், மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தன்னுடைய சொந்த மைதானத்தில் அசத்துவார்கள் எனவே எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் இந்திய அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் சஹால் வெறும் இரண்டு ஓவரில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 26 ரன்களும், அணியின் மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் 3 ஓவரில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 31 ரன்களும் விட்டு கொடுத்து ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
சூழற் பந்துவீச்சிக்கு சாதகமான மைதானத்திலேயே இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் இவ்வளவு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய கிரிக்கெட் வட்டத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மோசமாக செயல்பட்ட அக்சர் பட்டேல் மற்றும் அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் சஹாலையும், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் விமர்சித்து வருவதோடு அறிவுரைகளையும் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர், இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், அனுபவ வீரர் சஹாலின் செயல்பாடு ஏமாற்றத்தை அளித்தது என செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாஷிம் ஜாபர் தெரிவித்ததாவது,“இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரர் சஹால் மிக மோசமாக விளையாடிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். அணியின் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களும் (சஹால், அக்சர் பட்டேல்) வெறும் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளனர்.இதில் அக்சர் பட்டேல் போட்டியின் கடைசி ஓவரை வீசி 3 ஓவராக பதிவு செய்துள்ளார். இதை இந்திய அணி நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும் இந்திய அணியின் 2 சுழற் பந்துவீச்சாளர்களும் எட்டு ஓவர்கள் வீச முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஏழு ஓவராவது வீச வேண்டும்”, ஒட்டு மொத்தத்தில் நேற்றைய போட்டியில் இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு ஏமாற்றத்தை கொடுத்தது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.