18 மாசத்துக்கு முன்னாடி அவர யாருமே மதிக்கல.. ஆனா இப்ப இவர் இல்லாம டீம் இல்ல; சீனியர் வீரருக்கு முன்னாள் வீரர் பாராட்டு !! 1

புவனேஷ்வர் குமாரின் வளர்ச்சி மிகவும் சிறப்பான ஒன்றாகும் என்று சஞ்சய் மஞ்ச ரேக்கர் தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை துவங்கிய இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் ‘ஸ்விங் கிங்’ என்று பாராட்டும் அளவிற்கு மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவருடைய பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற பயத்திலேயே பேட்ஸ்மேன்களின் தூக்கம் கலைந்துவிடும் அளவிற்கு மிக சிறந்த முறையில் பந்து வீசிய புவனேஸ்வர் குமார், கடந்த சில வருடங்களுக்கு முன் காயம் காரணமாக நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்தார்.18 மாசத்துக்கு முன்னாடி அவர யாருமே மதிக்கல.. ஆனா இப்ப இவர் இல்லாம டீம் இல்ல; சீனியர் வீரருக்கு முன்னாள் வீரர் பாராட்டு !! 2

அதற்குப் பின் மீண்டும் இந்தியா அணியில் ரீ-எண்ட்றி கொடுத்த புவனேஸ்வர் குமாரால் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்பட முடியவில்லை நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் இவர் 14 போட்டிகளில் பங்கேற்று 12 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார்.

பந்தை வேகமாக வீசவும் முடியவில்லை, பந்து ஸ்விங்காகவும் இல்லை, இதனால் தயவுசெய்து நீங்களே ஓய்வை அறிவித்துவிடுங்கள் என்று பெரும்பாலானவர்கள் விமர்சிக்கும் வகையில் புவனேஸ்வர் குமாரின் ஆட்டம் மோசமாக இருந்தது.

18 மாசத்துக்கு முன்னாடி அவர யாருமே மதிக்கல.. ஆனா இப்ப இவர் இல்லாம டீம் இல்ல; சீனியர் வீரருக்கு முன்னாள் வீரர் பாராட்டு !! 3

ஆனால் இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் புவனேஸ்வர் குமார் கடின முயற்சியாலும் தன்னம்பிக்கையுடனும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான உள்ளூர் தொடரில் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.மேலும் அதனை தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அனைத்து அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார்.

புவனேஸ்வர் குமாரின் இந்த முன்னேற்றம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் வட்டாரத்திலும் பேசுபொருளாக உள்ளது.

18 மாசத்துக்கு முன்னாடி அவர யாருமே மதிக்கல.. ஆனா இப்ப இவர் இல்லாம டீம் இல்ல; சீனியர் வீரருக்கு முன்னாள் வீரர் பாராட்டு !! 4

இந்த நிலையில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்ச ரேக்கர் புவனேஸ்வர் குமாரின் வளர்ச்சி குறித்து வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் மஞ்சரெக்கர் பேசுகையில்,“புவனேஸ்வர் குமார் தற்பொழுது தான் ஒரு நேர்கானல் கொடுத்துள்ளார். மேலும் தற்பொழுது இந்திய அணியின் உச்ச நட்சத்திர வீரராக வளம் வருகிறார்.ஆனால் 18 மாதங்களுக்கு முன்பு அவர் சர்வதேச கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்துவிட்டது என்று அனைவரும் நினைத்தோம் ஆனால் அவர் தன்னுடைய மோசமான பார்மில் இருந்து மீண்டு வந்து தற்போது உலகக்கோப்பை தொடர்கான இந்திய அணியின் முக்கிய வீரராக உயர்ந்துள்ளது மிகச் சிறப்பான ஒன்றாகும் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.