எதாவது ஒரு காரணம் சொல்லுங்க பார்ப்போம்… சம்பந்தமே இல்லாமல் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த மூன்று வீரர்கள்
விண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் காரணமே இல்லாமல் இடம்பெற்றுள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
அடுத்த சில தினங்களில் வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இரு அணிகள் இடையேயான இந்த தொடர் ஜூலை 12ம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக், முகமது சிராஜ் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் திறமையான வீரர்கள் பலருக்கு இடம் கிடைத்திருந்தாலும், சரியான காரனமே இல்லாமல் இடம் கொடுக்கப்பட்டுள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
முகேஷ் குமார்;
இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத முகேஷ் குமார், India A அணிக்காக பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார். India A அணிக்காக முகேஷ் குமார் சிறப்பாக பந்துவீசியிருந்தாலும், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் முகேஷ் குமாரின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடிய முகேஷ் குமார் அதில் வெறும் 7 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியிருந்தார். இது மட்டும் இல்லாமல் அதிகமான ரன்களும் வாரி வழங்கியுள்ளார். இவருக்கு பதிலாக அர்ஸ்தீப் சிங்கிற்கு இந்திய அணியில் இடம் கொடுத்திருக்கலாம் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.