ஜெயதேவ் உனாத்கட்;
ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு, வலுவான அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணி ஜெயதேவ் உனாத்கட், முகேஷ் குமார் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருவது தேவையற்றது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. கடந்த 2013ம் ஆண்டிற்கு பிறகு இந்திய ஒருநாள் அணிக்காக விளையாடாத ஜெயதேவ் உனாத்கட்டிற்கு தேவையே இல்லாமல் தற்போது வாய்ப்பு கொடுப்பது ஏன் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கேள்வியாக உள்ளது.