தினேஷ் கார்த்திக்கை விட முகமது சமி தான் சிறப்பாக செயல்பட்டார் என்று பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
தற்போதைய இந்திய அணியின் மூன்று விதமான தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை படைத்த உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி,2018ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி பெரும்பாலானவர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார்.
மேலும் அதனை தொடர்ந்து 2021 உலகக் கோப்பை தொடரிலும் இவருடைய பந்திவீச்சு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இல்லை. இதனால் சமியை சர்வதேச டி20 போட்டியில் இருந்து இந்திய அணி ஓரம் கட்டியது.
பின் தன்னுடைய கடின முயற்சியால் 2021 முதல் மீண்டும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சமி,2022 ஐபிஎல் தொடரிலும் அதற்கு பின் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான லிமிடெட் தொடரிலும் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணி பேட்ஸ்மன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
இருந்த போதும் இவரை டி20 தொடரிலிருந்து இந்திய அணி புறக்கணித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் சமி இந்திய அணியில் இடம்பெறாதது, அவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற மாட்டார் என்பதை உணர்த்துவதாகவே உள்ளது.
இந்திய அணியின் டெஸ்ட் தொடரில் மட்டுமே அதிகம் பயன்படுத்தபட்ட முகமது சமி ஐபிஎல் தொடரிலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்தும், சமியை இந்திய அணி புறக்கணிப்பது ஏத்துக்கொள்ள முடியாத விஷயம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் பட்டெல், 2022 ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் எப்படி சிறப்பாக செயல்பட்டாரோ.. அதேபோன்று சமியும் சிறப்பாக தான் செயல்பட்டுள்ளார். ஆனால் இந்திய அணி ஏன் பாரபட்சமாக நடக்கிறது..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பார்த்தீவ் பட்டேல் பேசுகையில், “நியூ பாலில் பந்து வீச புவனேஸ்வர் குமாரும் அதனை தொடர்ந்து பும்ரா மற்றும் அர்ஸ்திப் சிங் உள்ளனர், மேலும் ஹர்ஷல் பட்டேல் தற்போது சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் ஏன் முகமது சமியை நியூபால் வீசக்கூடிய பந்துவீச்சாளராக இந்திய அணி ஏற்றுக் கொள்ளவில்லை என்பது எனக்கு குழப்பமாக உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் எப்படி சிறப்பாக செயல்பட்டாரோ.. பந்துவீச்சாளராக முகமது சமி ஒரு படி மேல் சிறப்பான ஆட்டத்தைதான் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சமி குஜராத் அணிக்காக கோப்பையை வென்றும் கொடுத்துள்ளார். இந்திய அணியின் இந்த பாரபட்சமான முடிவு வருத்தத்தை அளிக்கிறது. கடந்த உலகக் கோப்பை தொடரில் மோசமாக செயல்பட்டாலும், புவனேஸ்வர் குமார் மற்றும் சமி தங்களின் திறமைகளை முன்னேற்றியுள்ளனர். குறிப்பாக சமி பஞ்சாப் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய பொழுது தன்னுடைய பந்துவீச்சை மேம்படுத்தியுள்ளார். ஆனால் அவர் இன்னும் டெத் ஓவரில் சிறப்பாக செயல்படவில்லை என்று நீங்கள் குறை சொல்லி கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது என்று பார்த்திவ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.