தயவு செஞ்சு இந்த பையனோட கிரிக்கெட் வாழ்க்கைய கெடுத்திடாதீங்க... ரோஹித் சர்மா மீது முன்னாள் வீரர் காட்டம் !! 1

விண்டீஸ் அணிக்கு எதிரான டி.20 தொடரில் சூர்யகுமார் யாதவை துவக்க வீரராக களமிறக்கி வரும் இந்திய அணியின் முடிவை முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

தயவு செஞ்சு இந்த பையனோட கிரிக்கெட் வாழ்க்கைய கெடுத்திடாதீங்க... ரோஹித் சர்மா மீது முன்னாள் வீரர் காட்டம் !! 2

கே.எல் ராகுலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் விண்டீஸ் அணிக்கு எதிரான நடப்பு டி.20 தொடரில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. இஷான் கிஷன் போன்ற துவக்க வீரர்கள் இருந்த போதிலும், இந்திய அணியோ கே.எல் ராகுலுக்கு பதிலாக விண்டீஸ் அணியுடனான நடப்பு தொடரில் சூர்யகுமார் யாதவை துவக்க வீரராக களமிறக்கி வருகிறது.

மிடில் ஆர்டரில் பொறுப்பாக விளையாடக்கூடிய சூர்யகுமார் யாதவை துவக்க வீரராக களமிறக்குவது முட்டாள்தனம் என முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவோ, டி.20 போட்டிகளில் எந்த இடத்தில் களமிறங்கினாலும் விளையாடுவதற்கு வீரர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும், யாருக்கும் எந்த ஒரு நிரந்தர இடமும் கிடையாது என அறிவித்திருந்தார்.

தயவு செஞ்சு இந்த பையனோட கிரிக்கெட் வாழ்க்கைய கெடுத்திடாதீங்க... ரோஹித் சர்மா மீது முன்னாள் வீரர் காட்டம் !! 3

ரோஹித் சர்மாவின் இந்த முடிவு சரியா தவறா என கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் இது குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், சூர்யகுமார் யாதவ் துவக்க வீரராக களமிறக்கப்பட்டு வருவது குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த், இந்திய அணியின் இந்த முடிவு சூர்யகுமார் யாதவின் கிரிக்கெட் வாழ்க்கையே வீணடித்துவிடும் என தெரிவித்துள்ளார்.

தயவு செஞ்சு இந்த பையனோட கிரிக்கெட் வாழ்க்கைய கெடுத்திடாதீங்க... ரோஹித் சர்மா மீது முன்னாள் வீரர் காட்டம் !! 4

இது குறித்து ஸ்ரீகாந்த் பேசுகையில், ”நான்காவது இடத்தில் களமிறங்க சூர்யகுமார் யாதவ் மிக சிறந்த வீரர். எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சூர்யகுமார் யாதவ் 4வது இடத்தில் தான் களமிறங்க வேண்டும், அதுவே இந்திய அணிக்கும் பயனளிக்கும். எனவே அவரை துவக்க வீரராக களமிறங்க நிர்பந்திக்க கூடாது. வேறு துவக்க வீரர் வேண்டும் என்று நினைத்தால் ஸ்ரேயஸ் ஐயர் அல்லது இஷான் கிஷனை துவக்க வீரராக களமிறக்கி பார்க்கலாம். சூர்யகுமார் யாதவை நிர்பந்தித்து துவக்க வீரராக களமிறக்குவதால் எந்த பயனும் இல்லை. சூர்யகுமார் யாதவ் தன் மீதான நம்பிக்கையையே இழக்க நேரிடும், இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையையும் வீணடித்து விடும். கிரிக்கெட் விளையாட்டிற்கு நம்பிக்கை முக்கியமானது. இந்திய நிர்வாகம் தேவையற்ற முயற்சிகளை செய்து சூர்யகுமார் யாதவ் போன்ற சிறந்த வீரரை இழந்துவிட கூடாது என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.