ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் வேண்டாம்... இந்த 11 வீரர்கள் போதும்; முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங் !! 1
ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் வேண்டாம்… இந்த 11 வீரர்கள் போதும்; முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்

முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், விண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற இருக்கும் இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 12ம் தேதி துவங்க உள்ளது.

ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் வேண்டாம்... இந்த 11 வீரர்கள் போதும்; முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங் !! 2

கடந்த டெஸ்ட் சாம்பியன்சிப்  தொடரின் இறுதி போட்டியை போலவே, இந்த வருடத்திற்கான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. இதனால் அடுத்த டெஸ்ட் சாம்பியன்சிப் தொடருக்காக வலுவான அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணி, விண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால், கெய்க்வாட் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

இந்தியா – விண்டீஸ் இடையேயான எதிர்வரும் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பதால், முன்னாள் வீரர்கள் பலரும் இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் வேண்டாம்... இந்த 11 வீரர்கள் போதும்; முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங் !! 3

அந்தவகையில், இந்தியா – விண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், முதல் டெஸ்ட் போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

தனது ஆடும் லெவனின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மாவுடன், சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ள ஹர்பஜன் சிங், மிடில் ஆர்டரில் விராட் கோலி, ரஹானே ஆகியோரை தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக ஸ்ரீகர் பாரத்தை தேர்வு செய்துள்ள ஹர்பஜன் சிங், இஷான் கிஷனுடன் சேர்த்து ருத்துராஜ் கெய்க்வாட்டையும் தனது அணியில் இருந்து புறக்கணித்துள்ளார்.

ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் வேண்டாம்... இந்த 11 வீரர்கள் போதும்; முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங் !! 4

ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவருக்குமே தனது ஆடும் லெவனில் இடம் கொடுத்துள்ள ஹர்பஜன் சிங், பந்துவீச்சாளர்களாக முகமது சிராஜ், ஜெயதேவ் உனாத்கட் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள  முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், ஸ்ரீகர் பாரத், முகமது சிராஜ், ஜெயதேவ் உனாத்கட், முகேஷ் குமார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *