தவான் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரும் சொத்து என்று ஶ்ரீதர் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் இந்திய அணிக்காக மூன்று விதமான தொடரிலும் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த சீனியர் பேட்ஸ்மேன் ஷிகர் தவான், தற்பொழுது இந்திய அணிக்காக ஒருநாள் தொடரில் மட்டுமே பங்கேற்று விளையாடிய வருகிறார்.
ஐசிசியால் நடத்தப்படும் பெரிய தொடர்களில் எப்பொழுதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நற்பெயரை பெற்ற ஷிகர் தவான் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். மேலும் சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் இந்திய அணியை வழிநடத்தும் வீரராகவும் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
குறிப்பாக நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இளம் வீரர்கள் கொண்ட படையை தலைமை ஏற்று வழி நடத்திய ஷிகர் தவான் 3-0 என தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பேட்டிங்கில் சொதப்புகிறார் என்ற அவப்பெயரை நீக்கி இந்திய அணியின் முக்கிய வீரராக உருவெடுத்து விட்டார் என்று கூறும் அளவிற்கு இவருடைய ஆட்டம் மற்றும் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளதாக பெரும்பாலானவர்கள் பாராட்டுகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஶ்ரீதர், ஷிகர் தவான் இந்திய அணிக்கு கிடைத்த விலை மதிக்க முடியாத சொத்து என்று பாராட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து ஶ்ரீதர் பேசுகையில்,“கடந்த 8 அல்லது 9 வருடங்கள் தவான் இந்திய அணிக்கு விலைமதிக்க முடியாத வீரராக திகழ்ந்துவருகிறார்.குறிப்பாக லிமிடட் ஓவர் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போல தவானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரோஹித் மற்றும் விராட் டாப் ஆர்டரில் சிறப்பாக உள்ளனர்.ஆனால் இடது கை பேட்ஸ்மெனாக தவான் இந்திய அணியில் முக்கிய பங்காற்றுகிறார்.இந்திய அணியின் முக்கியமான துவக்க வீரராக தவான் செயல்படுகிறார். கடந்த சில ஆண்டுகளை விட தவானின் உடற்தகுதி சிறப்பாக உள்ளது,மேலும் தவான் ஆட்டத்தை கணித்து சிறப்பாக ஆடுகிறார்.ஒருநாள் போட்டியை பொறுத்தவரை தவான் இந்திய அணியின் முக்கிய வீரர், அதில் எந்த ஒரு ஆராய்ச்சியும் தேவையில்லை,2023 உலகக் கோப்பை தொடரில் தவான் முக்கிய பங்காற்றுவார்.டி20 தொடரில் பேக்-அப் வீரராக சிறப்பாக செயல்படுகிறார். ஐபிஎல் தொடரில்400+ ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.ஆனால் இவரை ஒருநாள் போட்டிகளில் விளையாட வைக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது என்று ஶ்ரீதர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.