சம்மந்தமே இல்லாம இவருக்கு எதுக்கு தான் டீம்ல இடம் கொடுக்குறாங்கனு தெரியல; முன்னாள் வீரர் காட்டம் !! 1

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியின் டி20 தேர்வு மிக மோசமாக உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி மிக சிறந்த முறையில் விளையாடிய ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது, மேலும் அதனை ஒட்டி நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.சம்மந்தமே இல்லாம இவருக்கு எதுக்கு தான் டீம்ல இடம் கொடுக்குறாங்கனு தெரியல; முன்னாள் வீரர் காட்டம் !! 2

என்னதான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், இந்திய அணியின் தேர்வு பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது நடக்கும் டி20 தொடரை சாதாரண தொடர் போன்று கருதாமல் உலகக்கோப்பை தொடருக்கான முன்னேற்பாடாக கருதி வீரர்களை தேர்ந்தெடுத்து விளையாட வைக்க வேண்டும் என்று இந்திய அணி தேர்வாளர்களை விமர்சனம் செய்து வருகின்றனர்.சம்மந்தமே இல்லாம இவருக்கு எதுக்கு தான் டீம்ல இடம் கொடுக்குறாங்கனு தெரியல; முன்னாள் வீரர் காட்டம் !! 3

சஞ்சு சாம்சன்,இஷான் கிஷன் மற்றும் தீபக் ஹூடா போன்ற வீரர்களை அணியில் இருந்து நீக்கிவிட்டு ஸ்ரேயாஸ் ஐயர் அஸ்வின் போன்ற வீரர்களை விளையாட வைத்திருப்பது முட்டாள்தனமான முடிவாகும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் டி20 தொடரில் விளையாடுவதற்கு தகுதியான வீரர்கள் இருந்த போதும் ஷ்ரேயாஸ் ஐயரை விளையாட வைத்தது சரியான முடிவு கிடையாது என்று இந்திய அணியின் தேர்வாளர்களை விமர்சித்துள்ளார்.சம்மந்தமே இல்லாம இவருக்கு எதுக்கு தான் டீம்ல இடம் கொடுக்குறாங்கனு தெரியல; முன்னாள் வீரர் காட்டம் !! 4

இதுகுறித்து வெங்கடேஷ் பிரசாத் பேசுகையில்,“இந்திய அணித் தேர்வாளர்களின் சில முடிவு., உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து தான் எடுத்தார்களா என்ற சந்தேகத்தை கிளப்புகிறது, சஞ்சு சாம்சன்,தீபக் ஹூடா மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்கள் இருந்தும் டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்ந்தெடுத்தது வினோதமாக உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல் போன்ற வீரர்கள் இந்திய அணியின் சிறந்த துவக்க வீரர்கள் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அணியை சம பலமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயர் 50 ஓவர் போட்டிகளில் சிறந்த வீரராக உள்ளார். ஆனால் டி20 தொடரில் அவரை விட சிறப்பாக செயல்படும் பல வீரர்கள் உள்ளனர்.ஷ்ரேயாஸ் ஐயர் டி20 தொடரில் தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வெங்கடேஷ் பிரசாத் பேசியிருந்ததார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், டி20 தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *