இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் செயலை பாராட்டி பேசி உள்ளார்.
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது, இந்த எளிய இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய இந்திய அணி 28 ஓவர்களில் தனது வெற்றியை பதிவு செய்தது.
இதனால் தனது 1000வது ஒருநாள் போட்டியை விளையாடும் இந்திய அணி, ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா என்று கூறலாம், ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்யும் பொழுது DRS வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உதவியுள்ளார், முதலில் 12வது ஓவரில் வாஷிங்டன் வீசிய பந்தில் டேரன் சேமி விக்கெட்டை எந்த ஒரு பதட்டமும் இல்லாமல்DRS மூலம் வீழ்த்தினார், அதேபோன்று 20 ஓவரில் சஹால் வீசிய பந்து நிக்கோலஸ் பூரன் காலில் பட்டது,ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இதை ரோகித் சர்மா சிறப்பாக கணித்து DRS மூலம் LBW விக்கெட்டை உறுதி செய்தார். அதேபோன்று மூன்றாவது முறையாக விராட் கோலியின் உதவியுடன் ரோஹித் சர்மா DRS அப்பீல் செய்து சமர் புரூக் விக்கெட்டை வீழ்த்தினார்.
என்னதான் சிறந்த கேப்டனாக இருந்தாலும் DRS கேட்பதில் சிலர் சொதப்பிவிடுவார்கள், ஆனால் இதற்கு முன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி DRS வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துவதில் வல்லவராக இருந்தார். அதேபோன்று தற்பொழுது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா கேப்டனாக தனது முதல் ஒருநாள் போட்டியிலேயே தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பத்திரிகைகளின் சந்திப்பின்போது பாராட்டியுள்ளார்.
அதில், தோனி இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் பொழுது DRSஐ (Dhoni Review System) தோனியின் சிஸ்டம் என்று கூறுவேன், தற்பொழுது ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுவதால் ரோகித் சிஸ்டம் என்று கூறலாம், ஏனென்றால் ரோகித் சர்மா சிறப்பான முடிவுகளை எடுத்துள்ளார்.
DRS சரியாக கேட்கப்பட வேண்டும் என்றால் அதற்கு விக்கெட் கீப்பரின் உதவி மிகவும் முக்கியம், ஏனென்றால் அவர்தான் பந்து பேட்டில் பட்டதா அல்லது காலில் பட்டதா என்பதை சரியாக கணித்துக் கூற முடியும் என்று சுனில் கவாஸ்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.