ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டை குறை சொல்வதற்கு ஒருகூட்டமே சுத்திக்கிட்டு ; ரோஹித் சர்மாவிர்க்கு ஆதரவாக பேசிய அஸ்வின்..
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

இதனால் 2-1 என தொடரை கைப்பற்றிய இந்திய அணியை பெரும்பாலானவர்கள் பாராட்டி வருகின்றனர். அதோடு இரு அணிகள் செய்த தவறு குறித்தும் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
ரோஹித் சர்மா மற்றும் டிராவிட்டை குறை சொல்வதற்கு ஒரு கூட்டம் சுற்றித் திரிகிறது..
குறிப்பாக எளிதாக வெல்லவெண்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது இந்திய அணியின் மெத்தென போக்கு தான் என பெரும்பாலானவர்கள் இந்திய அணி குறை கூறி வருவதோடுஇந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணியின் பயிற்சியாளர் டிராவிட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்திய அணியின் அனுபவ வீரர் அஸ்வின்., இந்திய அணி எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்றும் ,தேவையில்லாமல் ரோஹித் சர்மா மற்றும் அணியின் பயிற்சியாளர் டிராவிட்டையும் விமர்சித்து வருகின்றனர் என்று செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில்., “இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை அடைந்ததும் உடனடியாக சமூக வலைதளங்களில் இந்திய அணியின் தோல்வியை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக குறிப்பிட்ட வீரர்கள் ஏன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை கடுமையான விவாதங்களை மேற்கொண்டனர்.ஆனால் இதற்கு ஏன் இப்படி ஆக்ரோசமாக பேசுகிறார்கள் என்று எனக்கு சுத்தமாக தெரியவில்லை. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை இன்னும் சொல்லப்போனால் அவர்கள் முதல் ஒருநாள் போட்டியிலேயே விளையாடவில்லை. ரோஹித் சர்மா லோயர் ஆர்டரில் விளையாடினார்.இதனால் இது சம்பந்தமான விமர்சனம் ஏலத் துவங்கியது”.

“குறிப்பாக ஒரு சிலர் உலகக் கோப்பை தகுதி சுற்றில் வெற்றிப் பெறாத அணியிடம் இந்திய அணி தோல்வி அடைகிறது என்று பேசுகிறார்கள்.இன்னும் ஒருசிலர் இந்திய அணியின் முக்கிய வேலையே உலகக் கோப்பை வெற்றி பெறவேண்டும் என்பது மட்டும் தான் என்றும் பேசுகின்றனர்.ஆனால் வீரர்கள் எடுக்கும் இந்த ஓய்வு அவர்களின் வேலை பளுவை குறைப்பதற்காகவே, ஏற்கனவே நம்முடைய இந்திய அணியில் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் காயத்தில் உள்ளனர் அதுபோன்ற அசாம்பாவிதம் நடைபெறக் கூடாது என்றே இந்திய அணி இப்படி செய்தது என அஸ்வின் தெரிவித்திருந்தார்”.