இந்திய அணி மற்றும் கே.எஸ் பரத்தை கழுவி ஊற்றிய விமர்சகர்கள் ; கே.எஸ் பரத் விஷயத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக பேசிய முன்னாள் வீரர் !! 1
இந்திய அணி மற்றும் கே.எஸ் பரத்தை கழுவி ஊற்றிய விமர்சகர்கள் ; கே.எஸ் பரத் விஷயத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக பேசிய முன்னாள் வீரர்..

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இஷான் கிஷனை களமிறக்காமல் கே.எஸ் பராத்தை விளையாட வைத்தது சரியான முடிவு தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற உலகத்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் பரிதாபமாக தோல்வியை தழுவி ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டத்தில் விமர்சனத்தை பெற்றது.

இந்திய அணி மற்றும் கே.எஸ் பரத்தை கழுவி ஊற்றிய விமர்சகர்கள் ; கே.எஸ் பரத் விஷயத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக பேசிய முன்னாள் வீரர் !! 2

உலகின் தலைசிறந்த அணி என்று பெருமை பீத்திகொள்ளும் இந்திய அணியால் ஆஸ்திரேலிய அணியிடம் போராடி கூட தோல்வியடைய முடியவில்லை என்றும் இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்வதிலேயே பல பிரட்சனை உள்ளது என்றும் உலக அளவில் இந்திய அணிக்கு கடுமையான விமர்சனம் எழுந்து வருகிறது.

குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் இந்திய அணியில் அனுபவமே இல்லாத கேஎஸ் பரத்திற்கு வாய்ப்பு கொடுத்திருப்பதை விட இளம் அதிரடி வீரர் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் ஆனால் இந்திய அணி அந்த இடத்தில் மிகப்பெரிய தவறு செய்வது விட்டது என்றும் இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அணி மற்றும் கே.எஸ் பரத்தை கழுவி ஊற்றிய விமர்சகர்கள் ; கே.எஸ் பரத் விஷயத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக பேசிய முன்னாள் வீரர் !! 3

ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கேஸ் பலத்தை தேர்ந்தெடுத்தது சரியான முடிவு தான் என இந்திய அணியின் செயலுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில்., “ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கே எஸ் பரத்தை இந்திய அணி விளையாட வைத்தது சரியான முடிவு தான். வெறும் ஐபிஎல் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தாமல் முதல் தர மற்றும் லாங் ஃபார்மட்டில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே சரியான முடிவாகும். அந்த அடிப்படையில் கேஸ் பரத் விளையாடியதும் இனிவரும் காலங்களில் இந்திய அணிக்காக விளையாடுவதும் சரியான முடிவு தான். இந்திய அணி தெளிவான முடிவெடுக்காமல் செயல்படுவது உண்மைதான். இந்திய அணியில் முதல் தரப் போட்டிகளில் விளையாடும் வீரர்களை விட்டுவிட்டு ஐபிஎல் தொடர் விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுப்பது சரியான முறை கிடையாது ஆனால் இது காலப்போக்கில் சரியாக விடும் என்பது போன்றும் ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தார்.

இந்திய அணி மற்றும் கே.எஸ் பரத்தை கழுவி ஊற்றிய விமர்சகர்கள் ; கே.எஸ் பரத் விஷயத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக பேசிய முன்னாள் வீரர் !! 4

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே எஸ் பரத், விக்கெட் கீப்பிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டாலும் அவர் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *