இந்த பையனா சமாளிக்க முடியாம விண்டீஸ் வீரர்கள் திணறுவாங்க; இளம் வீரரை பாராட்டி பேசிய முன்னாள் வீரர் !! 1

ரவி பிஸ்னாயின் வந்து வீச்சு எதிரணி பேட்ஸ்மின்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது என்று டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி மிக சிறந்த முறையில் விளையாடிய ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது, மேலும் அதனை ஒட்டி நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.

இந்த பையனா சமாளிக்க முடியாம விண்டீஸ் வீரர்கள் திணறுவாங்க; இளம் வீரரை பாராட்டி பேசிய முன்னாள் வீரர் !! 2

இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இந்திய அணியின் இளம் வீரர்கள் என்றே கூறலாம், சீனிய வீரர்கள் தங்களது பொறுப்பினை உணர்ந்து செயல்பட்டாலும், இளம்வீரர்கள் ஒரு படி மேல் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று கூறும் அளவிற்கு ஒவ்வொருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புள்ள வீரராக பார்க்கப்படும் ரவி பிஸ்னாய், இந்த தொடரில் மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இந்த பையனா சமாளிக்க முடியாம விண்டீஸ் வீரர்கள் திணறுவாங்க; இளம் வீரரை பாராட்டி பேசிய முன்னாள் வீரர் !! 3

லெக் ஸ்பின்னரான பிஸ்னாய், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.குறிப்பாக இந்த போட்டியில் இவருடைய கூகிளி பந்து வீச்சு தரமான ஒன்றாக இருந்தது.

இந்த நிலையில் இவருடைய சிறப்பான ஆட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த பையனா சமாளிக்க முடியாம விண்டீஸ் வீரர்கள் திணறுவாங்க; இளம் வீரரை பாராட்டி பேசிய முன்னாள் வீரர் !! 4

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்து தன்னுடைய வெளிப்படையான கருத்தை அதிகம் பேசி வரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா, செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக ரவி பிஸ்னாயின் பந்து வீச்சை பாராட்டி பேசியுள்ளார்.

இதுகுறித்து டேனிஷ் கனரியா பேசுகையில்,“இந்த மைனாதனத்தில் ரவி பிஸ்னாயின் கூகுளி பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மென்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது, ரவி பிஸ்னாய் தன்னுடைய முதல் பந்தை வீசியபோது அது அந்த அளவிற்கு டேர்ன் ஆகும் என்பதை ரோமன் பவல் எதிர்பார்த்திருக்கவில்லை.அதேபோன்று விண்டிஸ் வீரர் கீமோ பவுளும் பிஸ்னாயின் பந்துவீச்சை கணிக்க முடியாமல் தன்னுடைய விக்கெட்டை பரிதாபமாக இழந்தார்.ரவி பிஸ்னாயின் பந்து வீச்சு எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று டேனிஷ் கனரியா பேசியிருந்தது குறிப்படத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *