இந்த இரண்டு பேரும் வந்துட்டா எல்லாருக்கும் பிரச்சனை தான்... இந்திய அணியை வீழ்த்தவே முடியாது; ரவி சாஸ்திரி நம்பிக்கை !! 1

ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் இதேபோன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணிக்கு அது பலமாக அமையும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3-0 என தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்த இரண்டு பேரும் வந்துட்டா எல்லாருக்கும் பிரச்சனை தான்... இந்திய அணியை வீழ்த்தவே முடியாது; ரவி சாஸ்திரி நம்பிக்கை !! 2

சீனியர் வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணியின் இளம் வீரர்களை கொண்ட படை, பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அசத்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்திலும் பேசுபொருளாகிவிட்டது.

குறிப்பாக இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த சுப்மன் கில், ஷிகர் தவான், அக்சர் பட்டெல்,முகமது சிராஜ் போன்ற வீரர்களை பெரும்பாலான முன்னால் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த இரண்டு பேரும் வந்துட்டா எல்லாருக்கும் பிரச்சனை தான்... இந்திய அணியை வீழ்த்தவே முடியாது; ரவி சாஸ்திரி நம்பிக்கை !! 3

அந்த வகையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இரு ஆல்ரவுண்டர்களும் தற்பொழுது போல் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணிக்கு அது மிகப் பெரிய பலமாக அமையும் என்று செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக தெரிந்துள்ளார்.

இது குறித்து ரவி சாஸ்திரி தெரிவித்ததாவது, “ஜடேஜா நீண்ட காலமாகவே அணியில் உள்ளார், அவருக்கு என்ன செய்ய முடியும் என்பது நன்றாகவே தெரியும், மேலும் அவர் தன்னுடைய செயல்பாட்டில் மிக கவனமாக உள்ளார். அதேபோன்று அக்சர் பட்டெல் இந்த சுற்றுப்பயணத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருவரும் பேட்டிங் என்று வந்துவிட்டால் திறமையாக செயல்படுகிறார்கள். இதேபோன்று இவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அது இந்திய அணியின் பலத்தை அதிகப்படுத்தும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.

இந்த இரண்டு பேரும் வந்துட்டா எல்லாருக்கும் பிரச்சனை தான்... இந்திய அணியை வீழ்த்தவே முடியாது; ரவி சாஸ்திரி நம்பிக்கை !! 4

எப்படி ஒரு நாள் தொடரில் தோல்வி அடையாமல் தொடரை கைப்பற்றுவதற்கு அக்சர் பட்டெல் 64 ரன்கள் அடித்து அசத்தினாரோ.. அதேபோன்று ஜடேஜா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *