தலைசிறந்த வீரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர்; ரோகித் சர்மாவை வெகுவாக பாராட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் !! 1

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயான் பிஷப் பத்திரிகைகளின் சந்திப்பின்போது பாராட்டிப் பேசியுள்ளார்.

இதில் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது, இந்த எளிய இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய இந்திய அணி 28 ஓவர்களில் தனது வெற்றியை பதிவு செய்தது.

தலைசிறந்த வீரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர்; ரோகித் சர்மாவை வெகுவாக பாராட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் !! 2

இதனால் தனது 1000வது ஒருநாள் போட்டியை விளையாடும் இந்திய அணி, ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு இந்திய அணியின் பந்து வீச்சாளர்களும் இந்திய அணியின் கேப்டன் மிகவும் உதவிகரமாக இருந்தனர்.

தலைசிறந்த வீரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர்; ரோகித் சர்மாவை வெகுவாக பாராட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் !! 3

இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த பந்துவீச்சாளர்கள் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர் அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயான் பிஷப் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது ரோஹித் சர்மாவின் செயல்பாட்டை பாராட்டிப் பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், உண்மையை சொன்னால் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவதை நாம் தாமதமாக பார்க்கிறோம், ரோஹித் சர்மாவின் திறமை உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது அவருடைய டைமிங் சிறப்பாக உள்ளது, ரோகித் சர்மாவை நான் நீண்ட காலமாகவே பார்த்து வருகிறேன் அவருடைய ஆட்டம் மிகவும் அற்புதமாக உள்ளது, ரோகித் சர்மா மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார் என்று இயான் பிஷப் பாராட்டு பேசியிருந்தார்.

தலைசிறந்த வீரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர்; ரோகித் சர்மாவை வெகுவாக பாராட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் !! 4

அதேபோன்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சாளர்களுக்கு தேவையான சுதந்திரத்தை கொடுக்கிறார் என்றும், சக வீரர்களுக்கு மிகவும் உற்சாகமூட்டுகிறார் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *