இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் விராட் கோலிக்கு முன்னர் களமிறங்கி அதிரடியாக விளையாடினார் இஷான் கிஷன். முன்னே இறங்க வைத்தது யாருடைய என்று பேசியுள்ளார் இஷான் கிஷன்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றிருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரை முடித்துவிட்டது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 438 ரன்களை முதல் இன்னிங்சில் அடித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 255 ரன்கள் மட்டுமே ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 183 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி.

இரண்டாவது இன்னிங்கில் இந்திய அணி அதிரடியான அணுகுமுறையில் விளையாடியது. 25 ஓவர்களுக்குள்ளேயே 181 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
இந்த இன்னிங்ஸில் இஷான் கிஷன் நான்காவது வீரராக களம் இறக்கப்பட்டு, 33 பந்துகளில் அரை சதம் கடந்து மிகச் சிறப்பாக விளையாடினார். தோனியின் சாதனையையும் குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 365 ரன்கள் இலக்கை துரத்தியது. துரதிஷ்டவசமாக போட்டியின் ஐந்தாம் நாளில் மழை பெய்ததால் ஆட்டம் டிராவில் முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த இஷான் கிஷன், நான்காவது வீரராக களம் இறக்கப்பட்டது ஏன்? மற்றும் ரோகித், விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானபோது கொடுத்த அறிவுரைகள் என்னென்ன? ஆகியவற்றை பகிர்ந்து கொண்டார்.
“ரோகித் சர்மாவுடன் நான் சில ஆண்டுகள் விளையாடியுள்ளேன். அவரது கேப்டன் பொறுப்பின் கீழ் விளையாடி இருக்கிறேன். ஆகையால் அவர் எப்படி போட்டிகளை அணுகுவார்? இளம் வீரர்களை எப்படி கையாளுவார்? என்பது குறித்து நன்றாக தெரியும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானபோது அவர் எனக்கு கூறியதெல்லாம் யாருடைய பேச்சையும் கேட்க வேண்டாம் உனக்கு என்ன அணுகுமுறை தோன்றுகிறதோ அதன்படியே விளையாடலாம் என்று சுதந்திரம் கொடுத்தார்.
அதேபோல் விராட் கோலி என்னிடம் வந்து நான்காவது வீரராக களமிறங்கி கொள்கிறாயா? என்று எல்லாம் கேட்டு தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுக்க முன்வந்தார். அந்த அளவிற்கு இரண்டு சீனியர் வீரர்களும் அதீத அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், இளம் வீரர்கள் சாதிக்க வேண்டும் என்கிற உதவிகளையும் செய்கின்றனர்.” பகிர்ந்து கொண்டார்.