ஒரு தமிழக வீரர் உட்பட இந்த 3 வீரர்களால் தான் விராட் கோலி-ரோஹித் சர்மா இடத்தை பூர்த்தி செய்ய முடியும் ; முன்னாள் வீரர் சொல்கிறார்..
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரின் இடங்களை பூர்த்தி செய்யப்போவது இந்த மூன்று வீரர்கள் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
சமகால இந்திய கிரிக்கெட்டின் லெஜென்டரி பேட்ஸ்மேன்களாக வளம் வரும் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய அணிக்காக செய்த பங்களிப்பு இன்றியமையாதது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த இருவரின் பேட்டிங்கால் இந்திய அணி பல வெற்றிகளை குவித்துள்ளது.

ஆனால் வயது முதிர்வு காரணமாக இவர்கள் எப்படியாவது ஓய்வை அறிவித்து தான் ஆக வேண்டும் என்ற கட்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களை ஓரம் கட்டி விட்டு இளவீரர்களுக்கு இந்திய அணி தேர்வாளர்கள் வாய்ப்பு கொடுத்து வருகின்றனர் .இதனால் கூடிய விரைவிலேயே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஓய்வு அறிவிப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
தற்போது இல்லை என்றாலும் இன்னும் ஒரு சில வருடங்களில் இந்த இரண்டு வீரர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து விடுவார்கள் என்று பார்க்கப்படுகிறது. இதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கு பின்பு இந்திய அணியில் அவர்களுடைய இடத்தை பூர்த்தி செய்வது யார் என்ற கேள்வி இந்திய கிரிக்கெட் வட்டத்தில் விவாத பொருளாகியுள்ளது.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்தும் இந்திய அணி வீரர்கள் குறித்தும் சுவாரசியமாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர்., விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரின் இடத்தை இந்த மூன்று வீரர்கள் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
அதில்., “இதில் முதல் வீரராக ஜெய்ஸ்வாலை தான் நான் பார்க்கிறேன்,ஏனென்றால் அவர் மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்பட கூடியவர். ஐபிஎல் தொடரில் இவருடைய ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. டெஸ்ட் போட்டியிலும் சிறப்பான அறிமுகத்தை கொடுத்துள்ளார்.மேலும் இந்த வரிசையில் அடுத்ததாக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். தலைமைத்துவ பண்பை விட்டுவிட்டு வெறும் பேட்டிங்கை வைத்து பார்த்தால் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகிய இரண்டு வீரர்களும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை பூர்த்தி செய்வதற்கு தகுதியான வீரர்களாக உள்ளனர்”.

“இவர்களை தவிர்த்து சாய் சுதர்சன் இதற்கு சரியான தேர்வாக இருப்பார் அவருடைய ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் பிடித்தது. குறிப்பாக பாகிஸ்தான் A அணிக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த சதம் மிகவும் அருமையாக இருந்தது. இவர் நிச்சயம் எதிர்கால இந்திய அணியின் சிறந்த வீரராக உருவெடுப்பார்” என வாஷிம் ஜாபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.