அநியாயம்டா இது... சர்பராஸ் கானை மீண்டும் புறக்கணித்த இந்திய அணி; வெறுப்பான ரசிகர்கள் !! 1
அநியாயம்டா இது… சர்பராஸ் கானை மீண்டும் புறக்கணித்த இந்திய அணி; வெறுப்பான ரசிகர்கள்

உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சர்பராஸ் கான், விண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த சில தினங்களில் வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

அநியாயம்டா இது... சர்பராஸ் கானை மீண்டும் புறக்கணித்த இந்திய அணி; வெறுப்பான ரசிகர்கள் !! 2

இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூலை 12ம் தேதி துவங்க உள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ.,  அறிவித்துள்ளது.

எதிர்பார்க்க பட்டது போன்று சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் இருந்து தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டவில்லை. இதனால் ரோஹித் சர்மாவே இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரஹானே இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனியர் வீரரான புஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். யசஸ்வி ஜெய்ல்ஸ்வால் அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரும் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளனர். சூர்யகுமார் யாதவிற்கு இடம் கிடைக்கவில்லை.

அநியாயம்டா இது... சர்பராஸ் கானை மீண்டும் புறக்கணித்த இந்திய அணி; வெறுப்பான ரசிகர்கள் !! 3

விக்கெட் கீப்பர்களாக கே.எஸ் பாரத்தும், இஷான் கிஷனும் இடம்பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர்களாக ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோரும், பந்துவீச்சாளர்களாக முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனாத்கட் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் விண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அநியாயம்டா இது... சர்பராஸ் கானை மீண்டும் புறக்கணித்த இந்திய அணி; வெறுப்பான ரசிகர்கள் !! 4

விண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், முகேஷ் குமார், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் ஒரு முறை சர்பராஸ் கான் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக மிக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகள் படைத்துள்ள சர்பராஸ் கான் மட்டும் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படுவது ஏன் என ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதில் சில;

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *