இந்திய அணி
இது மட்டும் நடந்தா இந்திய அணி அரையிறுதிக்கு செல்லவே தகுதி இல்லாத அணி; இர்பான் பதான் சொல்கிறார் !!

இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது.

கடந்த மாதம் 16ம் தேதி துவங்கிய டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது. குரூப் 1 பிரிவில் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் 2 பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது, ஆனால் இரண்டாவதாக பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நாளை நடைபெற இருக்கும் ஜிம்பாப்வே – இந்தியா மற்றும் வங்கதேசம் – பாகிஸ்தான் இடையேயான போட்டியின் முடிவுகளே குரூப் 2 பிரிவில் இரண்டாவதாக அரையிறுதிக்கு தகுதி பெறும் அணியை முடிவு செய்யும்.

இது மட்டும் நடந்தா இந்திய அணி அரையிறுதிக்கு செல்லவே தகுதி இல்லாத அணி; இர்பான் பதான் சொல்கிறார் !! 1

இந்திய அணி ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்தால் அது பாகிஸ்தான் அணி அரையிறுதி செல்வதற்கு வழிவகுக்கும். எனவே இந்தியா ஜிம்பாப்வே இடையேயான இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சிறிய அணியாக இருந்தாலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தரமான வெற்றியை பதிவு செய்த ஜிம்பாப்வே அணியை இந்திய வீரர்கள் குறைத்து மதிப்பிட்டு விட கூடாது என முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், இந்தியா ஜிம்பாப்வே இடையேயான போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்வதற்கே தகுதியற்ற அணியாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.

விராட் கோலி கேஎல் ராகுல்

இது குறித்து இர்பான் பதான் பேசுகையில், “ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால், அரையிறுதி சுற்றுக்கு செல்ல தகுதியற்ற அணியாக இந்திய அணி மாறிவிடும். ஜிம்பாப்வே அணி பந்துவீச்சில் முழு பலத்துடன் உள்ளது, ஆனால் பேட்டிங்கில் ஜிம்பாப்வே அணி வலுவானதாக இல்லை, எனவே இந்திய அணி ஜிம்பாப்வே அணியை இலகுவாக வீழ்த்த வேண்டும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகம் தான், போட்டியின் முடிவே வேறு மாதிரியாக இருந்திருக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *