முத்தரப்பு தொடருக்கு பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியா ஏ அணியை வெஸ்ட் ஏ அணி 133 ரங்களில் சுருட்டியது.
இங்கிலாந்து நடைபெற்று வந்த முத்தரப்பு தொடரில் இந்தியா ஏ, வெஸ்ட் இண்டீஸ் ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் மின்று அணிகளும் பங்கேற்றன. இதில் இந்தியா ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியை இறுதி போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.
அதன் தொடர்ச்சியாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஏ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ இரு அணிகளும் பங்கேற்கின்றன. போட்டி நேற்றைய தினம் பேகென்ஹாம் மைதானத்தில் துவங்கியது,
முதலில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பேட்டிங் செய்ய உடைவு செய்தது. முதலில் துவக்க வீரர்களாக பிரிதிவி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். முத்தரப்பு தொடரில் அசத்திய இருவரும் இங்கும் அசத்துவார்கள் என எதிர்பார்க்க பட்டது.
ஆனால், அதிர்ச்சி தரும் விதமாக இருவரும் முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மிக மோசமான துவக்கமாக அமைந்தது இந்திய அணிக்கு. அடுத்துவந்த கேப்டன் கருண் நாயரும் 20 ரங்களுக்கு வெளியேறினார்.
விஜய் ஷங்கர், விஹாரி இருவரும் சற்று நிதானமாக ஆடினாலும், அதுவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. விஹாரி 37 ரன்னுடனும், விஜய் ஷங்கர் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக 42.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி முதல் இன்னிங்சில் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்டீ இன்டெஸ் அணி சார்பில் கெமர் ஹோல்டர் மற்றும் லெவிஸ் இருவரும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. சமர் ப்ரூக்ஸ் மற்றும் சுனில் அம்பரீஸ் இருவரும் காலத்தில் இருந்தனர்.