இங்கிலாந்து அணியுடனான பயிற்சி போட்டிக்களுக்கான இந்திய “ஏ” அணி அறிவிப்பு !! 1
இங்கிலாந்து அணியுடனான பயிற்சி போட்டிக்களுக்கான இந்திய “ஏ” அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ள பயிற்சி போட்டிகளுக்கான இந்திய ”ஏ” அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.

ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடருக்கு பிறகு ஜூலை மாதம் இங்கிலாந்திற்கு செல்லும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இங்கிலாந்து அணியுடனான பயிற்சி போட்டிக்களுக்கான இந்திய “ஏ” அணி அறிவிப்பு !! 2

இந்நிலையில் இங்கிலாந்து அணியுடன் முதலில் நடைபெற உள்ள மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.

ஜூலை 3ம் தேதி துவங்க உள்ள இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா “ஏ” அணி யு.கே அணியுடனான பயிற்சி போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்த பயிற்சி போட்டிகளுக்கான இந்திய ஏ அணியையும் பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியுடனான பயிற்சி போட்டிக்களுக்கான இந்திய “ஏ” அணி அறிவிப்பு !! 3

அதன்படி பயிற்சி டெஸ்ட் போட்டிக்களுக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக கருண் நாயரும், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணி;

கருண் நாயர், சம்ரத், மாயன்க் அக்ர்வால், ஈஸ்வர்ன், ப்ர்தீவ் ஷா, விஹாரி, அன்கிட் பாவ்னே, விஜய் சங்கர், கே.எஸ் பாரத், ஜெயந்த் யாதவ், சபாஷ் நதீம், அன்கித் ராஜ்புட், முகமது சிராஜ், நவ்தீப் ஷைனி, ரஜ்னேஷ் குர்பானி.

ஒருநாள் முத்தரப்பு தொடருக்கான இந்திய ஏ அணி;

ஸ்ரேயஸ் ஐயர், ப்ரித்வி ஷா, மாயன்க் அகர்வால், சுப்மன் கில், விஹாரி, சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், விஜய் சங்கர், கிருஷ்ணப்பா கவுதம், அக்‌ஷர் பட்டேல், பிர்தீஷ் கிருஷ்ணா, தீபக் சாஹர், கலீல் அஹமது, ஷர்துல் தாகூர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *