பாக்., வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்க வேண்டும்; பாக்., வீரர் கோரிக்கை! 1

பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரிலும் இந்திய வீரர்கள் பாகிஸ்தானில் தொடரிலும் விளையாடுவதற்கு அதன் கிரிக்கெட் வாரியங்கள் அனுமதி கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என கோரிக்கை விடுத்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர்.

தீவிரவாதம் மற்றும் பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று மற்ற நாட்டின் அணிகள் விளையாடுவதற்கு அதன் கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்து வருகிறது. சமீபகாலமாக ஜிம்பாப்வே, இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகள் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

முன்பைவிட தீவிரவாதம் மிகவும் குறைந்து இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் மற்றும் நாட்டு வீரர்களை தங்கள் நாட்டில் விளையாடுவதற்கு அழைப்பு விடுத்து வருகின்றது. இதற்காக கோரிக்கைகளையும் அந்தந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு வைத்து வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வருகிறது. அந்த இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்டுவிட்டன. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகளும் பங்கேற்கின்றன. இதனை சுட்டிக்காட்டி தனது கருத்தினை பேசியிருக்கிறார் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர்.

அவர் கூறுகையில், என்னைப் பொறுத்தவரை விளையாட்டு மற்றும் அரசியல் இரண்டையும் தனித்தனியே பார்க்க வேண்டும். விளையாட்டு வீரர்களை சீண்டுவது முற்றிலும் தவறானது. ஆனால் மற்ற ஏற்பாடுகளை இந்த கிரிக்கெட் வாரியங்கள் செய்து கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டும். பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் போட்டிகளிலும் இந்திய வீரர்களை பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளிலும் விளையாட அனுமதிக்க வேண்டும்.

உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு பந்து வீச ஒவ்வொரு விளையாட்டு வீரனும் விரும்புவான். அதைத்தான் நானும் விரும்புகிறேன். ரோகித் சர்மா, விராத் கோலி போன்ற வீரர்களுக்கு நான் பந்துவீச ஆவளுடன் இருக்கிறேன். அப்பொழுதுதான் விளையாட்டின் உன்னதம் மற்றும் உச்சகட்டம் ரசிகர்களுக்கு புரியும்.

அதே போல் அவர்களும் பாகிஸ்தான் வந்து விளையாடினால் எங்கள் நாட்டின் ரசிகர்களுக்கு கிரிக்கெட்டின் உன்னதம் மேலும் புரியவரும். என தனது கருத்தினை தெரிவித்திருந்தார்

இவரின் இந்த கருத்திற்கு இந்த கிரிக்கெட் வாரியங்கள் ஏற்குமா? என்பதை வரும் காலங்களில் தான் நாம் பார்க்க வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *