இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பந்து வீசுகிறது இந்திய அணி.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருக்கிறது.

தொடரை வெல்லுமா இந்தியா? முதலில் பவுலிங் செய்கிறது! அணியில் மிகப்பெரிய மாற்றம்? 1

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய முடிவு செய்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்க உள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் தொண்டை வலியால் அவதிப்பட்டு வரும் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சன் வெளியில் அமர்த்தப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் அணியில் எடுத்து வரப்பட்டுள்ளார். இந்திய அணியின் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ராஜ்கோட் மைதானத்தில் களமிறங்கிய இந்திய அணி இன்றைய போட்டியிலும் களமிறங்க உள்ளது.

தொடரை வெல்லுமா இந்தியா? முதலில் பவுலிங் செய்கிறது! அணியில் மிகப்பெரிய மாற்றம்? 2

பெங்களூரு மைதானத்தில் அனுபவமிக்க சுழல்பந்து வீச்சாளர் சஹல் மீண்டும் வெளியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். குல்தீப் தொடர்ந்து அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

இந்திய அணி வீரர்கள் பட்டியல்:

தொடரை வெல்லுமா இந்தியா? முதலில் பவுலிங் செய்கிறது! அணியில் மிகப்பெரிய மாற்றம்? 3

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல் (கீப்பர்), மனீஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல்

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி (கீப்பர்), ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா. • SHARE
 • விவரம் காண

  இரண்டு முக்கிய தலைகள் இல்லாத இந்தியா அணியை தேர்வு செய்த ஷேன் வார்னே! கேப்டன் யார் தெரியுமா?

  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தனக்கு மிகவும் பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த அணியில்...

  வீடியோ: தனிமைப்படுத்தலில் இருக்கும்போது குதிரை சவாரி செய்யும் ஜடேஜா!

  இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்...

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ !!

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் வீரர்களின்...

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !!

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் தான் கிரிக்கெட் விளையாடி காலத்தில் தனக்கு சவாலாக...

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் !!

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் யுவராஜ் சிங் கிரிக்கெட்டை ஐபிஎல்-க்கு முன் ஐபிஎல்-க்குப் பிறகு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார்....