நமக்கு தான் அது எல்லாம் சுத்தமா செட் ஆகாதே... அப்பறம் எதுக்கு இந்த பேச்சு; கே.எல் ராகுலுக்கு பதில் கொடுத்த தினேஷ் கார்த்திக் !! 1
நமக்கு தான் அது எல்லாம் சுத்தமா செட் ஆகாதே… அப்பறம் எதுக்கு இந்த பேச்சு; கே.எல் ராகுலுக்கு பதில் கொடுத்த தினேஷ் கார்த்திக்

டெஸ்ட் போட்டியை அதிரடியாக விளையாட வேண்டும் என்பது இந்திய அணியின் மரபணுவிலே கிடையாது என தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார்.

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.ரோஹித் சர்மா காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் இந்திய அணியை இளம் நட்சத்திர வீரர் கே எல் ராகுல் வழிநடத்தி வருகிறார்.நமக்கு தான் அது எல்லாம் சுத்தமா செட் ஆகாதே... அப்பறம் எதுக்கு இந்த பேச்சு; கே.எல் ராகுலுக்கு பதில் கொடுத்த தினேஷ் கார்த்திக் !! 2

இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணி போல் அதிரடியாக விளையாடி வெற்றி பெறுவோம் என செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை கே.எல் ராகுல் கொடுத்திருந்தார்.

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் பழக்கம் இந்திய அணியின் மரபணுவிலேயே கிடையாது என தினேஷ் கார்த்திக், கே.எல் ராகுலின் பேட்டிக்கு மறு பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.

நமக்கு தான் அது எல்லாம் சுத்தமா செட் ஆகாதே... அப்பறம் எதுக்கு இந்த பேச்சு; கே.எல் ராகுலுக்கு பதில் கொடுத்த தினேஷ் கார்த்திக் !! 3

அந்த பேட்டியில்,“பங்களாதேஷ் மைதானம் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த தொடரில் முடிவு என்பது அரிதாகவே கிடைக்கும். அப்படி இந்தத் தொடர் டிராவில் முடிந்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னேறுவதில் தடை ஏற்படும் என்பதாலே, கேள் ராகுல் அதிரடியாக செயல்பட்டு வெற்றியை பெறுவோம் என பேட்டி அளித்திருக்கிறார்”.

“ஆனால் டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடுவது என்பது இந்திய அணியின் மரபணுவிலேயே கிடையாது, நாம் டெஸ்ட் போட்டியை டெஸ்ட் போட்டியாக மட்டுமே விளையாடுவோம். அப்படி அதிரடியாகத்தான் விளையாடுவோம் என முயற்சி செய்தால் அதற்கு வாய்ப்பே கிடையாது ஏனென்றால் மைதானம் அந்த அளவிற்கு ஸ்லோவாக உள்ளது, அதற்கு மேலும் அதிரடியாக விளையாட வேண்டும் என்றால் அணியின் டெம்போவை மாற்றவேண்டும் மற்றும் பேட்ஸ்மேன்கள் அதற்கு ஏற்றார் போல் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்” என தினேஷ் கார்த்திக் தெரிவித்திருந்தார்.இந்திய அணி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கத.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *