ஹர்திக் பாண்டியா செய்த அலட்சியத்தால் இந்தியா தோல்வி அடைந்ததா? - முன்னாள் வீரர் பேட்டி! 1

ஹர்திக் பாண்டியா செய்த முட்டாள்தனத்தால் தான் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது என்கிற பாணியில் பேசியுள்ளார் வாசிம் ஜாபர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி திட்டமிட்டபடி பந்துவீச்சில் இறங்கியது. போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றதால் இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என்ற காரணத்தினாலும் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை எடுத்திருக்கிறார்.

இந்த மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு நன்றாக ஈடுபட்டது. வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வாரிக் கொடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் நான்கு ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். குல்தீப் யாதவும் நன்றாக கட்டுப்படுத்தினார்.

ஹர்திக் பாண்டியா செய்த அலட்சியத்தால் இந்தியா தோல்வி அடைந்ததா? - முன்னாள் வீரர் பேட்டி! 2

ஆனால் தீபக் கூட இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார். அவருக்கு மீதம் இரண்டு ஓவர் இருக்க, கடைசியில் அர்ஷதீப் சிங் 20வது ஓவர் வீசி 27 ரன்கள் விட்டுக் கொடுத்தது. இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துவிட்டது.

அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவிற்கு 15 ரன்களில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தது. அதன் பிறகு நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருந்த சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் விக்கெட்டுகளும் சுழல் பந்துவீச்சில் விழுந்தன. 177 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 155 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. இறுதியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

ஹர்திக் பாண்டியா செய்த அலட்சியத்தால் இந்தியா தோல்வி அடைந்ததா? - முன்னாள் வீரர் பேட்டி! 3

மைதானம் சுழல்பந்துவீச்சிற்கு நன்றாக எடுபடும் பொழுது எதற்காக தீபக் ஹுடாவிற்கு இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசவைக்கப்பட்டார்? அவருக்கு கூடுதலாக இரண்டு ஓவர்களை கொடுத்திருக்கலாம். மிடில் ஓவர்களில் சரியான திட்டமிடல் இல்லை. கடைசியிலும் அவருக்கு கொடுத்திருந்தால் இவ்வளவு ரன்கள் வாரிக்கொடுத்திருக்க மாட்டார் என்கிற விமர்சனத்தை முன்வைத்து பேசி இருக்கிறார் வாசிம் ஜாஃபர். அவர் பேசியதாவது:

“பவர் பிளே ஓவர்களிலேயே நன்றாக தெரிந்து விட்டது. மைதானம் சுழல்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கின்றது என்று. ஆகையால் தான் வாஷிங்டன் சுந்தர் பவர் பிளே ஓவர்களில் பயன்படுத்தப்பட்டார். குல்தீப் யாதவும் நன்றாக பந்து வீசினார். இருவரின் பந்துவீச்சிலும் எவ்வளவு ஸ்பின் ஆனது என்று தெரிந்து விட்டது.

தீபக் ஹூடா

இப்படி இருக்க, தீபக் ஹூடா முதல் இரண்டு ஓவர்களில் நன்றாக ரன்களை கட்டுப்படுத்தியும், ஏன் அடுத்த இரண்டு ஓவர்களை அவர் வீசவில்லை? இந்த இடத்தில் தான் ஹார்திக் பாண்டியா தவற விட்டு விட்டார். எதிரணி அதை சரியாக பயன்படுத்தி மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து இந்தியாவை வீழ்த்திவிட்டது. சரியான திட்டமிடல் ஹர்திக் பாண்டியாவிடம் இல்லை.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *