தேர்வுக்குழுவால் கழட்டிவிடப்பட்ட இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தற்போது ஐதராபாத்தில் நடைபெறும் மொயின் – உத்-தௌலா தொடரில் ஏர் இந்தியா அணிக்காக விளையாட உள்ளார் இந்தத் தொடர் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது இவருடன் சேர்ந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நமன் ஓஜா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவும் ஏர்-இந்தியா அணிக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது
After a heavy circuit training this morning it's time to hit the nets!Some #hits, some #catches & lots of #fielding. Loved it! @UPCACricket pic.twitter.com/2IbMVs3OLL
— Suresh Raina?? (@ImRaina) August 17, 2017
இதனைப்பற்றி ஏர் இந்தியா அணியின் மேலாளர் மனோஜ் சர்மா இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
இந்தத் தொடரின் ஏற்பாட்டாளர்கள் போட்டியில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என கூறுவதை தடை செய்திருந்தனர்,ஆனாலும் நான் அதை பற்றி பேசி வருகிறேன், ஆல் ரவுண்டர் ரஜட் பாட்டியா மற்றும் மன்விந்தர் சிங் பிஸ்லா ஆகியோரும் ஏர் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர்
மேலும் யுவராஜ்சிங் அவரையும் ஏன் இந்திய அணிக்காக விளையாட வைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டு வருகிறது
இன்னும் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரை ஏர்-இந்தியா அணிக்காக விளையாட வைப்பது குறித்துத் தெளிவான முடிவு ஏதும் எட்டப்படவில்லை ஆனால் தொடர் தொடங்கிய பின்னர் ஹர்பஜன்சிங் அணியில் இணைந்து கொள்வார்- மனோஜ் சர்மா
இந்த தொடரில் இந்தியாவில் உள்ள பல்வேறு அணிகள் கலந்து கொள்ளும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் இரு அணிகள் களம் காண்கிறது. ஒன்று ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசன XI, இந்த அணி முன்னாள், இந்திய வீரர் அம்பட்டி ராயுடுவின் தலைமையில் களம் இறங்கும். மற்றொரு அணியான பிரெசிடென்ட் XI முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சுதீப் தியாகி தலைமையில் களம் இறங்கும்.
தேசிய கிரிக்கெட் அகாடமியில் வைக்கப்படும் ‘யோ-யோ’ பிட்னஸ் டெஸ்ட்டில் தோல்வி அடைந்ததே யுவராஜ் மற்றும் ரெய்னா வின் வெளியேற்றத்திற்காண காரணம் ஆகும். சமீபத்தில் தான் இலங்கை உடனான ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம் பெறவில்லை.
ஆரம்பத்தில் அவர்களை கைவிட்டதற்காக 4 மாத ஓய்வு , இரண்டு குழு வீரர்கள் என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இப்போது அதற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வீரர்களின் உடல் தகுதிக்காக வைக்கப்படும் ‘யோ-யோ’ எனப்படும் சர்வதேச உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததே அவர்கள் அணியில் இடம் பிடிக்காததற்கான காரணம் ஆகும்.
சுரேஷ் ரெய்னா உடனடியாக , உலகத்தின் மிகச்சிறந்த இரண்டு உடற்கூறு ஒழுங்கு நிபுனர்களை தனது உடற்பயிற்ச்சி நிபுணர்களாக நியமித்துள்ளார். அவர்களில் ஒருவர் பெகரூஸ் ரெய்னாவின் உடல் ததுதியையும் ஒழுங்கையும் மேம்படுத்தும் விதமாக செயல்படுவார். மற்றோர் நிபுணர் ஹங் ங்யுயேன் ரெய்னாவை மனதளவிலும் அவரது வாழ்வியலை விளையாட்டிலிருந்து வேறுபடுத்தி அவரது ஆட்டத்திறனை மேம்படுத்தவும் செயல்படுவார்.
அடுத்த ரஞ்சி கோப்பை போட்டியில் நன்றாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும் ,ஆகவே ரஞ்சி கோப்பைக்கு முன்னதாக அவர்களை நியமித்துள்ளார். வரும் காலங்களில் இந்தியாவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை என இந்தியா 23 போட்டிகளில் அவர்களை எதிர்த்து இந்தியாவில் ஆட உள்ளது. இந்த சீசனை சரியாக பயண்படுத்தும் நோக்கிலும் ரெய்னா செயல்படுகிறார்.