முகமது சமி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இரு வீரர்களையும் அணியில் இணைக்காதது மிகப்பெரிய முட்டாள்தனம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சு போர்டே தெரிவித்துள்ளார்.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ம் தேதி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று தரமான வீரர்களை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறது.
அந்த வகையில் கிரிக்கெட் தொடரில் அசைக்க முடியாத அணி என்று அனைவராலும் பேசப்பட்டு வரும் இந்திய அணி உலக கோப்பை தொடருக்கான தன்னுடைய அணியை அறிவித்திருந்தது.
ஆனால் இந்திய அணி தேர்ந்தெடுத்திருக்கும் வீரர்களில் எதிர்பார்த்த பெரும்பாலான வீரர்கள் இடம் பெறாதது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
குறிப்பாக முகமது சமி, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அணியில் இடம் பெறாதது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களிடத்திலும் கடுமையான அதிரருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக இந்திய அணியின் தேர்வு குறித்தும் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் குறித்தும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரியப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தேர்வு குழு தலைவர் சஞ்சு போர்டே முகமது சமி மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் அணியில் இடம் பெறாதது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சு போர்டே தெரிவித்ததாவது, “உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அணி போன்று தான் உள்ளது, ஆஸ்திரேலிய மைதானத்தில் முகமது சமி போன்ற ஒரு வீரர் சிறப்பாக செயல்படுவார். ஆனால் அவர் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றிருக்க வேண்டும் ஆனால் இந்திய அணி தேர்வாளர்கள் ரெகுலராக ரிஷப் பண்டை தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்று தெரிவித்திருந்தார். மேலும் உலக கோப்பை தொடரில் விராட் கோலி எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு அவர் ஆப்கான் அணிக்கு எதிராக துவக்க வீரராக செயல்பட்டு சதம் அடித்தாலும் அவர் மூன்றாவது பேட்டிங் ஆர்டரில் தான் விளையாட வேண்டும் அப்பொழுதுதான் அணிக்கு நல்லது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.