இங்கிலாந்தில் இந்த முறை இந்திய அணி நிச்சயமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நிச்சயம் வெல்லும் என இந்திய டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் புஜாரா உறுதியாக கூறியுள்ளார்.
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து சென்று 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கின்றன. இதற்கான உடற்தகுதி பரிசோதனை சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டன. அதற்க்கான முடிவுகளும் வெளிவிடப்பட்டன
யோ-யோ பரிசோதனை அடிப்படையில் இங்கிலாந்து செல்லும் வீரர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டன. அதில் அனைத்து வீரர்களும் தேர்ச்சிபெற்றதால் பட்டியலில் எந்தவித மாற்றமும் இல்லை.
இந்திய அணி செல்லும் முன்பாகவே , இந்திய ஏ அணி சென்றுவிட்டது. இந்திய ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் ஆட இருக்கின்றன. இதற்கான அணியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, முன்னாள் அண்டர் 19 கேப்டன் இஷான் கிஷான் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து ஏழும் முன்பாக ஆப்கானிஸ்தான் அணியுடன் பெங்களூருவில் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடக்கவுள்ளது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு ஆப்கானிஸ்தான் அணி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இதற்கு முன்பு இங்கிலாந்து சென்ற தோனி தலைமையிலான இந்தியா அணி 4-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. மேலும் 2011ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியிலும் 3-1 என்று தோழி அடைந்தது.
இந்நிலையில், பலரும் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாக, இந்திய அணிக்கு வெளி நாடுகளில் புள்ளி விவரங்கள் சாதகமாக இல்லை.
டெஸ்ட் போட்டிகள் பற்றி இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் சித்தேஸ்வர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்திய அணி தற்போது உள்ள நிலையில், நிச்சயம் தொடரை இந்திய அணி வெல்வது சாத்தியமே. இந்திய பந்து வீச்சாளர்கள் மிக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விராத் கோலி காயத்தில் இருந்து மீண்டு வந்து பயிற்சியில் இணைந்துள்ளார். இந்திய வீரர்களின் உடல்தகுதியும் சாதகமாக உள்ளது என தெரிவித்தார்.