இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய அணியில் கேப்டன்ஷிப்பில் எந்த மாற்றமும் தேவையில்லை என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பலர் தனது கருத்தை தெரிவித்து உள்ளனர். இதற்க்கு முக்கிய காரணம் ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டித் தொடர்களில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்று கொடுத்ததே.

ரோஹித் சர்மா இதன்மூலம் வெற்றிகரமான கேப்டன் என்ற பெயரை பெற்றுள்ளார். ஐபிஎல் போட்டித் தொடரில் இதுவரை ஒரு முறை கூட டைட்டில் பட்டத்தை வெல்லாத ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதுபற்றி அவர் கூறியதாவது ரோஹித் சர்மா ஒரு மிகச்சிறந்த வீரர் , இவர் இந்திய அணியில் விராட் கோலி இல்லாத சமயத்தில் இந்திய அணியில் பொறுப்பாக வழிநடத்தி அணிக்கு பலமுறை வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இவர் ஐபிஎல் போட்டித் தொடர்களில் 5 முறை டைட்டில் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இருந்தபோதும் இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பது தான் சரியான ஒன்றாகும். ஏனென்றால் விராட் கோலி மிகச்சிறப்பான தனது கேப்டன் பணி செய்து கொண்டிருக்கிறார் விராட் கோலியின் திறமை அபரிமிதமாக உள்ளது என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரில் 2-1 என்ற புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணியிடம் ஒருநாள் போட்டியை இழந்தது.

இந்நிலையில் 20 ஓவர் போட்டி மிகவும் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
மேலும் அவர் கூறியதாவது டிசம்பர் 17 நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணி பவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்று ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து தனது கருத்தை தெரியப்படுத்தியுள்ளா